தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகளும், சிறை தண்டணை கைதிகள் படமும் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில் போலீஸ் பயிற்சி பள்ளியில் நடக்கும் அரசியல், எந்த மாதிரியான கடின பயிற்சிகள் அளிக்கப்படுகிறது என கதைகளம் அமைத்து விறுவிறுப்பான திரைக்களம் அமைத்து உள்ள இயக்குனருக்கு பாராட்டுகள். போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று சினிமா இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார் தமிழ். போலிஸ் பிண்ணனியில் இருந்து வந்ததனால் போலீஸ் பயிற்சி பள்ளியில் நடக்கும் அரசியல் குறித்தும் அதன் பின் உள்ள அரசியல் குறித்து தெளிவாக பேசி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதையின் நாயகனான விக்ரம்பிரபுவின் தந்தை லிவிங்க்ஸ்டன் தன் ஊரில் பரோட்டா கடை வைத்து நடத்தி வருவார். உரிய தேதியில் அவர் கடனை திருப்பி செலுத்தவில்லை என்று அவரை அடித்து மகன் முன்னே அசிங்கப்படுத்துகிறார் கந்துவட்டிக் காரர். காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அதிகாரியின் உறவினர் என்பதால் வழக்கு சரியாக விசாரிக்கப்படாமல் போகிறது. இந்த துக்கத்தில் லிவிங்ஸ்டன் இறந்துவிட, நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருந்திருந்தால் வழக்கு விசாரணை சரியாக நடந்திருக்கும் என்று சொல்லிவிட்டு மடிகிறார். அதனைப் பார்த்து நேர்மையான போலீஸாக மாறுகிறார் விக்ரம் பிரபு.


மேலும் படிக்க | மாஸ் காட்டும் அடுத்த அப்டேட்!- ரியல் ‘Beast mode’ ஸ்டார்ட்!


ஒரு சாதாரண குடும்ப பிண்ணனியில் இருந்து காவலர் பயிற்சி பள்ளிக்கு வருகிறார் விக்ரம் பிரபு, வரும் இடத்தில் புதிய நண்பர்கள் கிடைக்கிறார்கள், 1982ம் ஆண்டு தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் நீதிமன்ற வழக்கு காரணமாக பல ஆண்டுகளுக்கு பின் இளைஞர்களுடன் பயிற்சியில் சேர்கிறார்கள். பயிற்சி வந்த இடத்தில் ஸ்குவாடு தலைவர் லாலுக்கும் இவருக்கும் ஆரம்பம் முதலே பிரச்சனை ஏற்படுகிறது, காவல் பயற்சி பள்ளியில் இருந்து ஓடுவிடுங்கள் என மிரட்டுகிறார், உன்னை எப்படி காக்கி சட்டை அணிய வைக்கிறேன் என பார்க்கிறாயா என சாவல் விடுகிறார் அதை தாண்டி காவல் துறையாக ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் டாணாக்காரன் படத்தின் கதை.


திரைக்கதை முழுவதும் ஒரு மைதானம் அதை சுற்றிய பகுதிகளில் நடைபெறுகிறது, பெரிய சண்டைக் காட்சிகள் ஏதும் இல்லை, ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி இணையவாசிகளின் பாராட்டுகள் வெகுவாக பெற்று வருகிறது டாணாக்காரன்.


மேலும் படிக்க | ரூ.1000 கோடி வசூலைக் குவித்த RRR..! கடுப்பில் ஆலியா பட்! என்ன காரணம்?


இயக்குனர் தமிழ், ஜெய்பீம் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருந்தார். அதனைத் தொடர்ந்து முதன் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ளார். அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம், இயல்பான கதாபாத்திரத் தேர்வு, திறந்தவெளி மைதான படப்பிடிப்பு என அனைத்திலும் நேர்த்தி தெரிகிறது. படத்தில் நடித்த அனைவரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.


நாயகனுக்கு சமமாக பயிற்சி அதிகாரியாக வரும் லால் திரையில் மிரட்டி இருக்கிறார், திமிர், மிடுக்கு ,ஆணவம் என வில்லனாக ஈசுவரமூர்த்தி கதாபாத்திரத்தை கனக்கட்சிதமாக கையாண்டு உள்ளார். படத்தின் கதாநாயகி அஞ்சலி நாயரை போலீஸ் அதிகாரியாக நடிக்க வைத்து உள்ளனர். ஆண் பயிற்சிப் பள்ளியில் பெண் அதிகாரி வர வேண்டுமா என்ற நிலையில் திணிக்கப்பட்ட கதாபாத்திரமாக நடித்து உள்ளார். வேறு சாய்ஸ் இருந்து இருக்காலம். இருந்தாலும் தனது பங்கை சரியாக செய்திருக்கிறார் நாயகி.


பயிற்சி பள்ளி அதிகாரியின் அரசியலால் திறமை இருந்தும் உயர் பதவிக்கு வர முடியவில்லை என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர். எந்த காதபாத்திரத்திற்கும் பொருத்தக் கூடிய திறமையான குணசித்திர நடிகரான அவருக்கு பாராட்டுகள். ஜிப்ரான் பிண்ணனி இசை ஓகே ஆனால் பெரிய அளவில் பாடல்கள் இல்லை, ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் ரசிக்கும்படியாக உள்ளது.


மேலும் படிக்க | மொழிக்கும், உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - கேஜிஎஃப் யஷ்


இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் கதை, பின் யூகிக்கக்கூடிய கதையாக மாறுகிறது. லாலுக்கும் விக்ரம் பிரபுக்கும் நடக்கும் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருக்கும்., அதே வேளையில் ஒரு சில காட்சிகள் பிண்ணனி கதை குறித்து சொல்லப்படாதது ஏமாற்றம். டாணாக்காரனை வெள்ளித் திரையில் வெளியிட்டு இருக்கலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ’டாணாக்காரன்’ காக்கிகள் கறை!


படம்: டாணாக்காரன்
நடிகர்கள்: விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், மதுசூதனன் ராவ், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட்
இயக்குநர்: தமிழ்
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவாளர்: மாதேஷ் மாணிக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR