SPB இன் த்ரோபேக் வீடியோவைப் பார்த்ததும் கண்ணீரில் இந்த இளம் இசையமைப்பாளர்கள்
ஊரடங்குக்கு முன் படமாக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரம்மண்யத்தின் (SP Balasubrahmanyam) த்ரோபேக் வீடியோவைப் பார்த்து இசையமைப்பாளர்கள் தமன் (Thaman) வேதனை வெளிப்படுத்தி உள்ளார்.
ஊரடங்குக்கு முன் படமாக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரம்மண்யத்தின் (SP Balasubrahmanyam) த்ரோபேக் வீடியோவைப் பார்த்து இசையமைப்பாளர்கள் தமன் (Thaman) வேதனை வெளிப்படுத்தி உள்ளார். வீடியோவில், இசையமைப்பாளர் மணி சர்மா மற்றும் ட்ரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி ஆகியோருடன் அவர் ஒரு படத்திற்கு போஸ் கொடுக்கிறார்.
வீடியோவை பகிர்ந்துள்ள அவர்., இது மீண்டும் பிரார்த்தனைக்கான நேரம் என்றும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (SPB) விரைவில் குணமாக வேண்டும் என அவருடைய அனைத்து ரசிகர்களும் மீண்டும் ஒரு முறை பலமாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
ALSO READ | S.P.பாலசுப்ரமண்யம் உடல்நலம் குறித்து கவலையை வெளிப்படுத்திய நண்பர் கமல்ஹாசன்
“இது மார்ச் மாதத்தில் என் அன்பான மாமாவுடன் ஊரடங்கு செய்யப்படுவதற்கு முன்பு இருந்தது #SPBalasubrahmanyam gaaru இந்த வீடியோவை இப்போது பார்த்தேன் என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை மாமா மாமா pls pls #Getwellsoon கடினமான பையன்களை ஜெபிப்போம். லவ் u மாமா #GetWellSoonSPBSIR . ” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி பாலசுப்பிரமண்யம் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி அவரது நிலை மோசமடைந்தது, அதன் பிறகு அவர் வென்டிலேட்டர் மற்றும் ஈசிஎம்ஓ (Extracororeal Membrane Oxygenation) ஆதரவில் வைக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, பாதிப்பு அதிகமானது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் கலக்கமடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது.
ALSO READ | Breaking: SPB-ன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிவிப்பு
இந்த நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் கடந்த 24 மணி நேரமாக மீண்டும் கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது. உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவக்குழுவினர் எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது.
அவர் விரைவாக குணமடைய வேண்டும் என பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் (Social Media) மூலம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.