#GetWellSoon: திரும்பி வா... எழுந்து வா.. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக தொடரும் பிரார்த்தனை!

புகழ் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என அவரது கோடானக்கோடி ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 25, 2020, 01:05 AM IST
  • பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது: மருத்துவமனை அறிக்கை
  • எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என ரசிகர்கள் பிராத்தனை
#GetWellSoon: திரும்பி வா... எழுந்து வா.. எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்காக தொடரும் பிரார்த்தனை! title=

SPB Health Update: தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyam) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது. SPB தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது சென்னையின் எம்ஜிஎம் ஹெல்த்கேர் (MGMவ Health Care) மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டார். 74 வயதான புகழ் பெற்ற பாடகருக்கு இப்போது COVID-19 வைரஸ் இல்லை. ஆனால் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. 

ALSO READ  | Breaking: SPB-ன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிவிப்பு

முன்னதாக கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) அவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். அவர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது மருத்துவமனை அவர் உடல் நலம் திடீரென மோசமடைந்துள்ளதாக கூறியுள்ளது. 

இதனால் அவர் விரைவில் குணமடைந்து திரும்பி வர வேண்டும் என அவரது கோடானக்கோடி ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர். Praying for #SPBalasubrahmanyam மற்றும் #GetWellSoon என்ற ஹேஷ்டேக் மூலம் அவர் மீண்டும் எழுந்து வர வேண்டும். தங்களுக்காக காத்திருக்கிறோம் என ரசிகர்கள் உருக்கமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

அவரை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், அவரது நெருங்கிய நண்பருமான கமல்ஹாசன் (Kamal Haasan) நேரில் சந்திக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Trending News