Thangalaan Actress Malavika Mohanan Favourite Food In Madurai : தங்கலான் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகிறது. மதுரையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட மாளவிகா மோகனன், தனக்கு அங்கு பிடித்த உணவு குறித்து பகிர்ந்து கொண்டார். விக்ரம் பேசிய போது, தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும் நமது மண்வாசனையும் இருக்கும் என்று கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் புரோமோஷன் விழா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை மாளவிகா மோகனன், பார்வதி உட்பட திரைப்படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்.


மாளவிகா மோகனன் செய்தியாளர்களிடம் பேசியபோது 


“மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும், கறித்தோசை, ஜிகர்தண்டா என இங்குள்ள உணவு பிடிக்கும் இந்தியாவிலயே மதுரையில் தான் உணவு சிறப்பாக உள்ளது. தங்கலான் பட ஷூட்டிங் தொடக்கம் மற்றும் முடிவு இரண்டுமே இங்கு தான் நடந்தது. எனது சிறப்பான இடமாக மதுரை அமைந்துள்ளது. விரைவில் நான் தமிழில் சரளமாக பேசுவேன். பல்வேறு இடங்களில் சூட்டிங் நடைபெற்றாலும் மதுரை எப்போதும் தனி ஸ்பெசல் தான், பலமுறை சொல்வேன் விக்ரம் சிறந்த நடிகர். தங்கலானில் ஸ்கிரீனில் சிறப்பாக சண்டை போடுவார், ஆனால் ஆப் ஸ்கிரினில் நல்ல நண்பர். 



இந்த படத்தில் நடித்த ஆங்கில நடிகர் டேனி புதிய இடம் புதிய கலாச்சாரத்தோடு சேர்ந்துவிட்டார், இவர் அதிகளவு இந்திய படங்களில் நடிக்க வேண்டும் மதுரைக்கு வர வேண்டும் கறிதோசை சாப்பிட வேண்டும்” என்று கூறினார். 


மேலும் படிக்க | தங்கலான் டிரைலருக்கு ரசிகர்களின் ரியாக்ஷன்! “நேஷனல் அவார்டு எடுத்து வைங்க டா..”


நடிகர் விக்ரம் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : 


“மதுரை எனக்கு ஸ்பெஷலான இடம். விடுமுறை என்றாலே எனக்கு மதுரை தான் நினைவுக்கு வரும் , அனைத்து விடுமுறையிலும் இங்கு தான் இருப்பேன், 10ஆண்டுகள், மதுரை என்றாலே மக்கள் விடுமுறை, கோவில் பாட்டு, அழகர்கோவில் பாட்டு, கழுதைகள் என அனைத்தும் நினைவுக்குவரும் நான். மதுரை சாப்பாடு என்ஜாய் பண்ணேன்.


ஒவ்வொரு கதாபாத்திரத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் ,இந்த படத்தில் டேனிக்கு அதிகளவு காயம் ஏற்பட்டது அதன்பின்ஆப்ரேசன் செய்து 3 மாதம் ரெஸ்ட் எடுத்தார் பின்னர் ஷூட்டிங்  ஸ்பாட்டுக்கு வந்தார், படத்துக்காக உயிரை கொடுத்து நடித்தார். டேனி பேசும் இங்கிலிஸ் எனக்கே தெரியும் ஆனால் அவர் அனைவரோடும் கனெக்ட் ஆகிருவாரு,  இந்தியராகவே மாறிவிட்டார்.  மாளவிகா யார் என்பதை இந்த படம் மூலம் தெரியவரும்” என்று கூறினார். மேலும், “ஆக்சன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார். இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் எனது மனைவியாக ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார்” என்று நாயகிகளுக்கு புகழாரம் சூட்டினார். 


நடிகர் டேனியல் பேசியபோது :


“நடிகர் விக்ரம் சிறந்த நடிகர் மதுரை மக்கள் நல்ல மக்கள் இந்த படம் வித்தியாசமாக இருக்கும், இந்தியாவின் சிறந்த நடிகராக விக்ரம் உள்ளார் என்றார். முன்னதாக தங்கலான் பட டிரெய்லர் மட்டும் பாடல் வீடியோ காட்சிகள் திரையிட்டபோது நடிகை மாளவிகா மோகனின் நடிகர் விக்ரம் நடிகர் டேனியல் ஆகியோர் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஜாலியாக நடனமாடியபடி உற்சாகமாக பாடலை ரசித்தனர்” என்று கூறினார். 


மேலும் படிக்க | Malavika Mohanan: மாளவிகா மோகனனுக்கு விரைவில் திருமணமா? உண்மை என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ