Vikram Diet : எடையை சட்டென குறைக்க நடிகர் விக்ரம் செய்யும் விஷயம்! சிம்பிளா இருக்கே..

Actor Vikram Diet Plan : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் சியான் விக்ரம், 58 வயதிலும் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். அது எப்படி தெரியுமா?

Actor Vikram Diet Plan : கோலிவுட்டில் இருக்கும் திறமையான நடிகர்களுள் ஒருவர், நடிகர் விக்ரம். கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் இருக்கும் இவர், கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர். எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்காக எந்த தூரத்திற்கு வேண்டுமானாலும் சென்று தனது உடல் அமைப்பை மாற்றிக்கொள்வார். இதனால் ஏற்படும் விளைவ்களையும் அசால்டாக சமாளிப்பார். இவருக்கு, இன்று பிறந்தநாள். இதையொட்டி, விக்ரம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் என்று பார்ப்போமா?

1 /7

‘சேது’ படத்தில், சியான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் சியான் விக்ரம் என்றே இவருக்கு பெயர் வந்துவிட்டது. ஒரு படத்துக்காக அதன் ஹீரோ எந்த அளவு உடலை மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மாற்றி திரையில் ரசிகர்களை அசத்துபவர், விக்ரம். இவருக்கு தற்போது 58 வயதாகிறது. இந்த வயதிலும் இவர் இளமை தோற்றத்தில் இருக்க என்ன காரணம்? 

2 /7

நடிகர் விக்ரம், தனது படங்களுக்காக உடல் எடையை குறைப்பது, கூட்டுவது போன்ற பல விஷயங்களை செய்வார். ஷங்கர் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான ‘ஐ’ படத்தில் ஹீரோவாக நடித்தார். அப்போது படத்தின் ஒரு சில காட்சிகளுக்காக அவர் உடல் எடையை அதிகமாக இழக்க வேண்டியதாக இருந்தது. இதை அவர் எப்படி செய்தார் தெரியுமா? 

3 /7

ப்ரோட்டீன் டயட்: நடிகர் விக்ரம், உடல் எடையை குறைக்கும் சமயத்தில் ப்ரோட்டின் டயட் இருந்தாராம். அதாவது, அவர் எடுத்துக்கொள்ளும் அனைத்து உணவுகளும் டயட் உணவாக இருந்ததாம். முட்டை, சிக்கன், நட்ஸ் வகை உணவுகள் போன்றவையை மட்டும் அவர் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. 

4 /7

Low Carb Diet :  20 ல் இருந்து 57 கிராம் வரை உள்ள கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வாராம். இதனால், உடலில் 80 முதல் 240 கலோரிகள் வரை மட்டுமே சேரும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பலர் இந்த டயட்டை பின்பற்றுகின்றனர். இதனால் அவருக்கு வேகமாக உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது. 

5 /7

Cardio Exercise : நடிகர் விக்ரம், உடல் எடையை குறைப்பதற்காக தினசரி கார்டியோ உடற்பயிற்சிகளையும் செய்து வந்திருக்கிறார். நீச்சல் பயிற்சி, சைக்ளிங், ஓட்டப்பயிற்சி போன்றவற்றை இவர் செய்ததாக கூறப்படுகிறது.

6 /7

Foods:  ஒரே மாதிரியான டயட் இருந்தால் போர் அடிக்கும் என்று கூறும் நடிகர் விக்ரம், ப்ரோட்டீன் ஷேக் கேக்ஸ், பேக் செய்யப்பட்ட குக்கீஸ், சியா விதைகள் மற்றும் குயினாவோ உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவாராம். 

7 /7

Consistency: நடிகர் விக்ரம், ஒரு நாளில் உடல் எடையை குறைத்தவரோ, கூட்டியவரோ அல்ல. தனக்கு ஏற்ற பலன் வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து விடாமுயற்சியுடன் உழைத்துக்கொண்டே இருப்பவர். எனவே உங்களுக்கும் நல்ல ரிசல்ட் வரவேண்டும் என்றால், அதற்கு சரியான முயற்சிகளை, சரியான வழியில் மேற்கொள்ள வேண்டும். (இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், அடிப்படை இணையதள தரவுகளை வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. இதற்கு ZEE MEDIA எந்த வகையிலும் பொறுப்பேற்காது.)