தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?
The GOAT Movie First Day Box Office Collection Prediction : விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும்? இதோ பார்க்கலாம்!
The GOAT Movie First Day Box Office Collection Prediction : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி கோட் (The Greatest Of All Time) திரைப்படம், நாளை (செப்டம்பர் 5ஆம் தேதி) வெளியாகிறது. விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர்-நடிகைகள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி ரசிகர்கள் பலர் காத்துக்கொண்டுள்ளனர்.
தி கோட்:
தமிழ் திரையுலகின் ஜாலியான இயக்குநராக அறியப்படுபவர், இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் திரையுலகிற்குள் வந்து இத்தனை ஆண்டுகளில், முதன் முறையாக அவருடன் தி கோட் படம் மூலம் கைக்கோர்த்திருக்கிறார், நடிகர் விஜய். விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கும் இவர், முழு நேரமாக சினிமாவிற்கு குட்-பை கூற இருக்கிறார். இதையடுத்து, தி கோட் திரைப்படம் அவருக்கு கடைசி படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது.
தி கோட் திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். லைலா, ஜெயராம், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 80களில் முன்னணி நாயகனாக இருந்த மைக் மோகன், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
ரிலீஸ் கொண்டாட்டம்..!
தமிழ் திரையுலகில் இருக்கும் மாஸ் ஹீரோக்களான ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாகும் போது, அவை வெறும் பட ரிலீஸாக பார்க்கப்படுவதை தாண்டி, ரசிகர்களின் கொண்டாட்டமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும், நடிகர் விஜய் விரைவில் சினிமாவை விட்டு விலக இருப்பதால் தி கோட் படம் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கும் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | தி கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது
முதல் நாள் வசூல் கணிப்பு:
ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார் போன்றவர்களின் படங்கள் வெளியாகும் போது, படம் எப்படியிருந்தாலும் வசூல் கலெக்ட் ஆகிவிடும் என்பது பலருக்கு தெரியும். இந்த நிலையில், இப்படம் கண்டிப்பாக முதல் நாளிலேயே சுமார் ரூ.100 கோடி வரை வசூல் ஈட்டிவிடும் என சில சினிமா விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் கணித்திருக்கின்றனர்.
காரணம், உலகளவில் வெளியாகும் தி கோட் திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் தொடங்கியவுடன் டிக்கெட்டுகள் சரசரவென விற்று தீர்ந்தன. இந்த நிலையில், இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ப்ரீ-புக்கிங்கில் சுமார் 11.81 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் 5.41 கோடியும், கேரளாவில் 2.72 கோடியும், மகாராஷ்டிராவில் 32.18 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம், இதுவரை வெளியான விஜய்யின் படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் எவ்வளவு?
தி கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில், அர்ச்சனாக கல்பாத்தி தயாரித்து வழங்குகிறார். படம் குறித்து சமீபத்திய நேர்காணல்களில் பேசியிருந்த அர்ச்சனா கல்பாத்தி, படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். அதில், விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.200 காேடி என்று குறிப்பிட்டார். ஆக, படத்தின் பட்ஜெட்டில் பாதி விஜய்யின் சம்பளம் என்பது பலருக்கும் அதன் பிறகு புரிந்தது. சென்னை, ஹைதராபாத், கேரளா என உள்ளூரை தாண்டி, ரஷ்யா, டன்சானியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு சென்றும் இப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | “அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ