“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!

Latest News Actor Vijay GOAT Review : நடிகர் விஜய், கோட் படத்தை பார்த்துவிட்டு கூறிய விஷயம் குறித்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 5, 2024, 01:10 PM IST
  • கோட் படத்தின் முதல் காபி
  • விஜய் கூறிய விமர்சனம்
  • வியப்பில் வெங்கட் பிரபு!!
“அவசரப்பட்டுட்டேன்..” GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ரிவ்யூ!!  title=

Latest News Actor Vijay GOAT Review : கோலிவுட்டின் டாப் ஸ்டாரான நடிகர் விஜய், தற்போது GOAT (The Greatest Of All Time) படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் படத்தின் முதல் காபியை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவிடம் பேசியிருப்பது குறித்த தகவல் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. 

தி கோட் : 

விஜய்க்காகவா, அல்லது அப்படத்தின் கதைக்காகவா என்று தெரியவில்லை, இதற்கு The GOAT என்று பெயர் வைத்தார் வெங்கட் பிரபு. தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநர் என்று புகழப்படும் இவர், இதுவரை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் விதகமாக படங்களை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார். இடையில் ஓரிரண்டு படங்கள் சறுக்கினாலும் விட்ட இடத்தை அடுத்த படத்தில் பிடித்து விடுதிலும் வல்லவர். அந்த வகையில், கடைசியாக அவர் இயக்கிய கஸ்டடி திரைப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் சறுக்கி விட, அடுத்து விஜய்யுடன் கைக்கோர்த்திருக்கிறார். 

கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மேலும் ஜெயராம், அஜ்மல், யுகேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். கடந்த சில ஆண்டுளாக இதன் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் பேட்ச்-வர்க் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் விரைவில் இது முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கோட் படத்தின் முதல் காபி..

எந்த படமாக இருப்பினும் அதை எடிட் செய்வதற்கு முன்னர், அல்லது எடிட்டிங்கிற்கு கொடுப்பதற்கு முன்னர் படக்குழுவினர் அவுட்புட் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்பர். அந்த வகையில், கோட் படத்தின் முதல் காபியையும் விஜய்க்கு போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. இதைப்பார்த்து விஜய் சொன்ன விஷயம்தான் தற்போாது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. 

விஜய் சொன்ன ரிவ்யூ!!

கோட் படத்தின் முதல் காபியை பார்த்து பிரமித்து போன நடிகர் விஜய், அவரை ‘கலக்கிட்ட பா..’ என பாராட்டியிருக்கிறார். மேலும், தான் அவசரப்பட்டு ரிட்டையர்மெண்டை அறிவித்து விட்டதாகவும் உன்னுடன் இன்னும் ஒரு படம் சேர்ந்து பண்ணியிருக்கலாம் என்று வெங்கட் பிரபுவிடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதைக்கேட்ட வெங்கட் பிரபு, மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போய்விட்டாராம். 

மேலும் படிக்க | GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை! என்ன தெரியுமா?

விமர்சனத்துக்காள்ளான விஜய்..!!

நடிகர் விஜய்க்கு கோட் படத்தில் டீ-ஏஜிங் டெக்னாலஜி உபயாேகப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து ஸ்பார்க் பாடல் வெளியானது. இந்த பாடலில், விஜய்யின் முகம் பார்ப்பதற்கு அவரைப்போலவே இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் செய்த வண்ணம் இருந்தனர். இதனால், படத்தின் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பும் வெகுவாக குறைந்திருக்கிறது. இதுவும் நல்லதுதான் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

கோட் படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து படம் எப்படியிருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், படத்தில் விஜய்யின் இரட்டை வேட லுக், அவரது பிறந்தநாளன்று வெளியானது. அதில் வயதான விஜய் கூட பரவாயில்லை, டீ-ஏஜிங் விஜய்யை பார்ப்பதற்கு ஏலியன் போல இருப்பதாக பலர் நெகடிவ் விமர்சனங்களை முன் வைத்தனர். அதே போல, ஸ்பார்க் பாடலும் யுவன் சங்கர் ராஜாவிற்கு கெட்ட பெயரை தேடித்தந்தது. இதையொட்டி, படம் தேறுமா தேறாதா என்ற கேள்விக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். ஆனால், அதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். 

மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News