தி கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது

Free Movie Ticket For The GOAT Movie : தி கோட் திரைப்படம் நாளை வெளியாகயுள்ள நிலையில், தற்போது கும்பகோணம் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2024, 02:36 PM IST
  • தி கோட் படத்திற்கு இலவச பட டிக்கெட்.
  • நாளை வெளியாகிறது விஜய் இன் தி கோட்.
தி கோட் படத்திற்கு இலவச டிக்கெட்.. எங்கு எப்படி பெறுவது title=

Free Movie Ticket For The GOAT Movie : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் பல ஸ்பெஷலான விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதன்படி தற்போது இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில், அசத்தலான செய்தி ஒன்று மக்களுக்காக வெளியாக உள்ளது. 

தி கோட் திரைப்படம்:
உலகம் முழுவதும் நாளை தி கோட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனிடையே இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சினிமாவை விட்டு விலகி, முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய்க்கு, தி கோட் (The Goat) படம் கடைசி சில படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் நடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | Ajith Kumar Trisha Son In Good Bad Ugly Movie :  குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?

லைலா, ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பலரும் எதிர்பாராத சர்ப்ரைஸ்கள் பல காத்துக்கொண்டுள்ளன. அவற்றை படக்குழுவினர் வரிசையாக கூறினாலும், தியேட்டரில் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். 

தி கோட் படத்தில் விஜயகாந்த் AI கேமியோ:
மறுபுறம் மறைந்த நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் (Vijaykanth) இந்த படத்தில் ஏஐ மூலம் கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றயுள்ளதாக கூறப்படுகிறது.

தி கோட் படத்தில் இடம் பெற்றிருக்கும் கேமியோக்கள்:
தி கோட் திரைப்படத்தில், நடிகர் விஜயகாந்த் தவிர இன்னும் சில கேமியோ கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஒன்று, த்ரிஷா. இவர், ஒரு பாடலுக்கு இதில் நடனமாடுகிறாராம். அதே போல, நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு முக்கிய காட்சியில் வருவதாக கூறப்படுகிறது. 

அஜித் டைலாக்கை பேசிய விஜய்:
இதனிடையே பயங்கர எதிர்பார்ப்பில் வெளியாகிவிருக்கும் தி கோட் படத்தில் மங்காத்தா திரைப்படத்தில் அஜித் பேசிய “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது..” என்கிற டைலாக்கை விஜய் பேசியிருக்கிறார். இதை தவிர இன்னும் பல அஜித் பட ரெஃபரென்ஸ்கள் இதில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

தி கோட் படத்திற்கு இலவச டிக்கெட்:
இந்நிலையில் நடிகர் விஜய் (Actor Vijay) நடிப்பில் நாளை வெளியாக உள்ள `தி கோட்' திரைப்படம் வெற்றி பெற வேண்டி கும்பகோணம் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அன்னதானத்துடன் பெண்களுக்கு மட்டும் இலவச டிக்கெட் வழக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மட்டும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Latest News Bigg Boss 8 Tamil Contestant : பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News