நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். வரும் ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.



விஸ்வரூபம்- 2வுக்குப் பிறகு கமலின் எந்தப் படமும் வெளியாகவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் இப்படம் வெளியாகவுள்ளதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல இப்படத்தில் வி.எஃப்.எக்ஸ் நவீன தொழில்நுட்பம் வாயிலாக கமலை இளவயது தோற்றத்திலும் காட்டியுள்ளார்களாம். 30 வயது தோற்றத்துக்காக சுமார் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


இந்நிலையில் இப்படத்தில் இணைந்துள்ள ஷான்வி ஸ்ரீவஸ்தவாதான் தற்போதைய பேசுபொருளாக உள்ளார். மாடல் மற்றும் சினிமாவில் இயங்கிவரும் ஷான்வி, 2019ஆம் ஆண்டு டைம்ஸ் நிறுவனம் வெளியிட்ட  Most Desirable Women 50 எனும் பட்டியலில் 20ஆவது இடம் பிடித்துக் கவனம் பெற்றார். 2019ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான அவனே ஸ்ரீமன் நாராயணா எனும் படத்தின் நாயகியாகவும் நடிகை ஷான்வி நடித்திருந்தார்.



மேலும் படிக்க | விஜய்க்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாமாம்- காரணம் என்னனு பாருங்க!


 


பான் இந்தியா ரிலீஸாக வெளியாகவுள்ள விக்ரம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளத்துடன் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. ஷான்வி கன்னடத்தில் தற்போது பாப்புலர் நடிகையாக உருவெடுத்துவருகிறார். அது மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் அவர் நடித்துவருகிறார். அந்த வகையில் இது படத்துக்கு வியாபார ரீதியாகவும் கைகொடுக்கும் என்ற அடிப்படையில்தான் அவர் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


                                          


 


நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா இளவயது கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளாராம். சுமார் 10 நிமிடங்கள் வரை இவரது காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படத்தின் ஃப்ளாஸ்பேக் காட்சியில் இவர் தொடர்பான போர்சன்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல விஜய் சேதுபதியின் கதாபாத்திரமும் ஃப்ளாஸ்பேக்கில் இடம்பெற்றுள்ளதாம்.


மேலும் படிக்க | லுங்கி டான்ஸுக்குத் தயாராகும் ஆர்யா?! கசிந்த புதிய தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR