லுங்கி டான்ஸுக்குத் தயாராகும் ஆர்யா?! கசிந்த புதிய தகவல்!

 நடிகர் ஆர்யா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2022, 05:29 PM IST
  • நடிகர் ஆர்யா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
  • இயக்குநர் முத்தையா விருமன் படத்தை எடுத்து முடித்துள்ளார்.
  • விருமன் வாயிலாக இயக்குநர் ஷங்கரின் மகள் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.
லுங்கி டான்ஸுக்குத் தயாராகும் ஆர்யா?! கசிந்த புதிய தகவல்! title=

நடிகர் ஆர்யாவுக்கு விஷாலுடன் இணைந்து நடித்த ‘எனிமி’ படத்துக்குப் பின்னர் எந்தப் படமும் வெளிவரவில்லை.  

தற்போது நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் நடித்துவரும் ஆர்யா, ‘தி வில்லேஜ்’ எனும் வெப் சீரீஸிலும் நடித்துவருகிறார். அமேசான் பிரைமில் இது வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஆர்யா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளாராம். கார்த்தி மற்றும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கும் விருமன் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார் முத்தையா.

                                          Viruman

ஷங்கர் மகளுக்கு இதுவே அறிமுகப்படம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்துவருகிற நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில்தான் ஆர்யா- முத்தையா கூட்டணியில் புதிய காம்போ உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருகிற ஆகஸ்ட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் இப்படம் முத்தையாவின் வழக்கமான படங்களைப் போல கிராமத்துக் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

                                                        Arya

மேலும் படிக்க | விஜய்க்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாமாம்- காரணம் என்னனு பாருங்க!

ஆர்யாவைப் பொறுத்தவரை கிராமப் பின்னணி சார்ந்த படங்களில் அதிகம் நடித்ததில்லை. ஆனால் முத்தையாவோ முழுக்கவும் கிராமப் பின்னணியில் படம் எடுக்கக்கூடியவர். எனவே இப்படம் வித்யாசமான காம்போவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொதுவாக முத்தையாவின் படங்களில் ஹீரோக்களுக்கு ட்ரவுசர் தெரிய லுங்கி கட்டிவிடுவது எழுதப்படாத விதி. எனவே ஆர்யா நடிக்கவுள்ள இப்படத்திலும் அது மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இப்படத்தின் கதாநாயகி மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க| ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவைப் பற்றித் தெரியாத சுவாரஸ்யத் தகவல்கள்! - HBD-Rohit-Sharma

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News