திருச்சிற்றம்பலம் ரிலீஸ் எப்போது? உதயநிதி வெளியிட்ட அப்டேட்
தனுஷ் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கார்த்திக் நரேன் நடிப்பில் தனுஷ் கடைசியாக நடித்திருந்த மாறன் படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கத்தில் மட்டும்தான் தனுஷ் சரியான கதையை தேர்வு செய்கிறார். மற்ற் இயக்குநர்களிடம் அதை கோட்டைவிட்டுவிடுகிறார் என்ற பேச்சும் எழுந்தது.
இந்தச் சூழலில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தெலுங்கு தமிழில் உருவாகும் வாத்தி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களில் கமிட்டானார்.
இதில் திருச்சிற்றம்பலத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படத்தில் அவருடன், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர் அனிருத் இசையமைக்கிறார்.
மேலும் படிக்க | மாட்டுக்கறிக்கு தடை... திராவிட ஆட்சியா? சங்பரிவார் ஆட்சியா?
சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் எப்போது வெளியாகுமென தனுஷின் ரசிகர்கள் காத்திருந்த சூழலில் படத்தின் ரிலீஸ் தேதியை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கும் அளித்த பேட்டியில் அவர், “திருச்சிற்றம்பலம் படம் ஜூலை ஒன்றாம் தேதி வெளியாகும்” என்றார். இதனால் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.
மேலும் படிக்க | பேரக் குழந்தை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR