Rajinikanth Salary: லோகேஷ் கனகராஜ் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநராக கருதப்படுகிறார். இதுவரை இவர் இயக்கிய நான்கு படங்களுமே மெகா ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக, கடைசியாக வெளியான விஜயின் மாஸ்டரும், கமலின் விக்ரமும் நூறு கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறிப்பாக, விக்ரம் ஒரு மெகா பிளாக்பஸ்டர் ஆனது. இது, லோகேஷ் கனகராஜின் வரைபடத்தை மேலே கொண்டு சென்றார். இதனால், அவரது இயக்கத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை, தமிழ் நடிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.


லோகேஷ் இப்போது விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோரை வைத்து, 'லியோ' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் 60 நாள் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நிறைவடைந்தது. அதையடுத்து சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது பையனூரில் நடந்து வருகிறது. அங்கு விஜய், சஞ்சய் தத் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | நடிகர் சரத் பாபு உடல்நிலை கவலைக்கிடம் - மருத்துவமனையில் அனுமதி


லியோ படத்தை முடித்த லோகேஷ் கனகராஜ் யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்பதுதான் இப்போது பலரின் கேள்வியாகவும் இருக்கிறது. கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தொடங்கப் போவதாக ஏற்கனவே கூறப்பட்டது. கைதி படத்தின் முதல் பாகம் வசூல் சாதனை படைத்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.


இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது, கைதி 2 படத்திற்கு முன், ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்கப்போகிறார் என்றும், அதனை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நீண்ட நாட்களாக கைதி 2 படத்தின் பணிகள் நிலுவையில் உள்ளதால், ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முதலில் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், ரஜினிகாந்தின் சம்பளம் குறித்து புதிய பேச்சு எழுந்துள்ளது. லியோ படத்திற்கு விஜய் தற்போது 130 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சம்பள விஷயத்தில் ரஜினிதான் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார். தர்பார், அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகு ஜெயிலருக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால், ஜெயிலர் படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பதாலும், லோகேஷை வைத்து ஒரு படத்துக்கு தயாரிப்பு நிறுவனங்களிடம் அதிக டிமாண்ட் இருப்பதாலும், அந்த படத்துக்கு ரூ. 160 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி தான் நம்பர் 1 என்பதை ரஜினிகாந்த் நிரூபிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | “அயலான்” படம் குறித்து முக்கிய அறிவிப்பு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ