தமிழ் சினிமாவை மிரட்டிய டாப் 10 வில்லன்கள்!
சினிமாவை பொறுத்த வரை ஒரு ஹீரோ மாஸாக தெரிய வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற மாதிரியான பவர்ஃபுல்லான ஒரு வில்லன் தேவை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கும் வில்லன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
சினிமாவை பொறுத்த வரை ஒரு ஹீரோ மாஸாக தெரிய வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற மாதிரியான பவர்ஃபுல்லான ஒரு வில்லன் தேவை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் 10 இடங்கள் பிடித்திருக்கும் வில்லன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.Top 10 என்றதும் இவர்களுக்கு இந்த இடம் இவர்களுக்கு அந்த இடம் என்று சொல்ல போவது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் எல்லா வில்லன்களுமே ரொம்ப பவர்ஃபுல் தான் அது யார் யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்
சத்யராஜ்
முதலாவதா பாக்க உள்ளது அமைதிப்படை படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சத்யராஜ். அமைதிப்படை படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது . 90களின் காலகட்டம் அது. நடிகர் சத்யராஜ் ஹீரோவாக வால்டர் வெற்றிவேல் படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்ற நேரம். அப்போதுதான் சத்யராஜின் நண்பர் மணிவண்ணன் மூலமாக அமைதிப்படை வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. முதலில் படத்தில் வில்லன் என்ற உடன் தயங்கிய சக்தியராஜ், பின்னர் மணிவண்ணன் கூறிய கதை பிடித்து போக அமைதிப்படை படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் ஐக்கியம் ஆகிவிட்டார். இந்தப் படத்தில் சத்யராஜ் sarcastic வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார்.அந்த வகையில அமாவாசை தேர்தலில் வெற்றி பெற்று நாகராஜசோழனாக மாறும் காட்சி.. mass காட்சியாக அமைந்திருக்கும் . அதனாலதான் அமைதிப்படை படத்தில் சத்யராஜின் அம்மாவாசை கதாபாத்திரம் தற்போது வரை சிறந்த வில்லன் கதாபாத்திரமாக பேசப்படுகிறது.
பிரகாஷ்ராஜ்
பிரகாஷ்ராஜ் இப்போது ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக இருக்கிறார்.குறிப்பாக திருச்சிற்றம்பலம்,பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவுல பேசப்பட்டது.பிரகாஷ் ராஜ் இந்திய சினிமாவில் 300 க்கும் மேற்பட்ட படங்கள்ல நடித்திருக்கிறார்.இவர் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படத்தில் சைக்கோ தனமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கதி கலங்க வைத்திருப்பார். இந்த படத்தில் அஜித்,பிரகாஷ் ராஜ், சுவலட்சுமி ,ரோகினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தன்னுடைய மனைவியின் தங்கையை தன் மனைவியா ஆக்கிக் கொள்ள துடிக்கும் வகையில் அந்த கதாபாத்திரம் அமைந்திருக்கும். பிரகாஷ்ராஜ் உடைய வில்லத்தனத்தின் உச்சம் என்று ஆசை படத்தை சொல்லலாம்.
ரம்யா கிருஷ்ணன்
ஹீரோயின், குணச்சித்திர நடிகை என பல படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.இவர் தன்னுடைய 14 வது வயதில் வெள்ளை மனசு படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானாவர். 30 வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதில் குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி என்னும் ஐகானிக் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்று வரை, தமிழ் சினிமாவில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களில் இந்த கதாபாத்திரம் வலுவானது .சமீபத்துல பொன்னியின் செல்வன் விழாவில் படையப்பா படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம் பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்த் நீலாம்பரி கதாபாத்திரம் பொன்னின் செல்வன் படத்தில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை தழுவி உருவாக்கப்பட்டதாக சொல்லி இருந்தார். தான் காதலித்த ஒருவரை அடைய வேண்டுமென வெறித்தனமான ஆசையும், அது நிறைவேறாத போது ஏற்பட்ட கோபமும் இதுவரை கண்டிராத தீவிரத்தோட நீலாம்பரி கதாபாத்திரம் வெளிப்படுத்தும். அதுதான் நீலாம்பரி கதாபாத்திரத்தை தற்போது வரை மக்கள் பேசி கொண்டிருக்க காரணமாக உள்ளது.
மேலும் படிக்க | திருமணத்தில் முன்னாள் காதலரை நினைத்து அழுதாரா ஹன்சிகா? வைரலாகும் வீடியோ!
மன்சூர் அலிகான்
1991ல விஜயகாந்த், மன்சூர் அலிகான்,சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த படம் தான் கேப்டன் பிரபாகரன் இந்த படத்தில் மன்சூர் அலிகான் சந்தன கடத்தல் வீரப்பன் சாயலில் அமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். குறிப்பாக அந்த படத்தில் அவருடைய குரல் ரசிகர்களை வெகுவா ஈர்த்தது. வீரப்பன் யாரேன்றே தெரியாத கால கட்டத்தில் மன்சூர் அலிகான் உருவத்தில் வீரப்பனை அடையாளம் காட்டிய படம் கேப்டன் பிரபாகரன் தான்.மேலும் மன்சூர் அலி கானை பலசாலியான வில்லனாக தமிழ் சினமாவிற்கு அடையாளம் காட்டியதும் இந்த படம் தான். இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்பு மன்சூர் அலிகானுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அந்த காலகட்டத்தில் அதிகமா வர தொடங்கியதாம். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
நாசர்
வில்லன் என்றால் படம் பார்க்கும் நம்மையும் சேர்த்து மிரட்ட வேண்டும். அப்படியொரு வில்லன்களில் நாசரும் ஒருவர். .இவர் வில்லனாக மிரட்டிய படம் தான் குருதிப்புனல். இந்த படத்தில் பத்ரி என்ற கதாபாத்திரத்தில் தீவிரவாத அமைப்பின் தலைவராக மிரட்டி இருப்பார் நாசர். மேலும் தேவர்மகன், அபூர்வ சகோதரர்கள், தவசி, அன்பே சிவம் போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் தடம்பத்திதவர் நாசர். இவர் இயக்குனர் பாலச்சந்தரின் ‘கல்யாண அகதிகள்’ படத்தில் தொடங்கி இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்புடத்தக்கது.
ரஜினிகாந்த்
தன்னுடைய தனித்துவமான ஸ்டைல் மூலமாக சினிமா துறையில் முத்திரை பதித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . இவர் இதுவரை 260 படங்களில் பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் நிறைய படங்களில் வில்லனாக நடிதிருக்கிறார். அந்த வகையில பார்க்கும்போது 1977 இல் வெளிவந்த 16 வயதினிலே படத்தை ரஜினி வில்லத்தனத்திற்க்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லலாம். இந்த படத்துல பரட்டை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மிரட்டி இருப்பார். இந்த படம் வெளி வந்த பிறகு ரஜினிகாந்த் அடிக்கடி அந்த படத்தில் பேசும் ”இது எப்படி இருக்கு” டயலாக் ரொம்பவே பிரபலமானது . அதே போன்று மூன்று முடிச்சு படமும் ரஜினியின் வில்லதனத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லலாம். ஒரே பெண்ணை இரண்டு ஆண்கள் காதலிப்பது போன்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் ஸ்ரீதேவியோடு சேர்ந்த நடித்திருப்பார் . அந்தப் படத்தில் சொந்த நண்பனையே கொலை செய்யும் கொடூர வில்லனாக நடித்திருப்பார் ரஜினி. தொடர்ந்து பில்லா, எந்திரன், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களிலும் ரஜினிகாந்த் வில்லனாக நடித்து அசத்திருப்பார்.
கமல்ஹாசன்
Experimental சினிமா எடுப்பத்தில் வித்தகரான கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல உன்னதமான படைப்புகளை வழங்கியிருக்கிறார். எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் அவர் இதுவரை 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.அதில் சில படங்களில் வில்லனாகவும் ரணகளப்படுத்தியிருப்பார். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தில் ஃபெல்ட்சர் என்ற கதாபத்திரத்தில் இறக்கமற்ற வில்லனாக நடித்து அனைவரையும் தியேட்டர் சீட்டின் நுனியில் உட்கார வைத்திருப்பார் கமல். 2001 ஆம் ஆண்டு வெளியான ஆளவந்தான் என்ற படத்திலும் நந்து என்ற கதாப்பாத்திரத்தில் கமல் நடித்திருப்பார். தனது சகோதரரின் கர்ப்பிணி மனைவியை கொல்ல துடிக்கும் கொடூரமான சைக்கோ வில்லனாக கதிகலங்க வைத்திருப்பார் கமல். இந்த படம் அந்த காலகட்டத்தில் வசூல் ரீதியாக வெற்றிபெற தவறினாலும் காலம் கடந்தும் இது பேசப்படுகிறது. மேலும் சிவப்பு ரோஜாக்கள் படத்திலும் வில்லத்தனம் கலந்த ஹீரோவாக அசத்தியிருப்பார் கமல்ஹாசன்.!
ரகுவரன்
தமிழ் சினிமா வில்லன் என்று பேசும்போது ரகுவரன் பெயர் இல்லாமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு அவரது வில்லத்தனம் இருக்கும். தனித்துவமான அந்த குரல் படம் பார்ப்பவர்களையே மிரள வைக்கும் வகையில் இருக்கும். ரகுவரனின் வில்லத்தனத்திற்கு எடுத்துக்காட்டாக பாட்ஷா திரைப்படத்தை சொல்லலாம். மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் ரகுவரன். இன்று வரை தமிழ் சினிமாவின் தலைசிறந்த வில்லன் கதாபாத்திரமாக இந்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் பேசப்படுகிறது. அடுத்ததாக முதல்வன் திரைப்படத்தை சொல்லலாம். இந்த படத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக ரகுவரன் நடித்திருப்பார். அர்ஜுன் புகழேந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அர்ஜுனும் ரகுவரனும் சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொரு காட்சியிலும் ரகுவரன் தனது extreme வில்லத்தனத்தை காட்டியிருப்பார். இது தவிர ரட்சகன்,காதலன் போன்ற படங்களில் வில்லனாகவும் அதே வேளையில் சம்சாரம் அது மின்சாரம், அமர்க்களம் ,யாரடி நீ மோகினி, சிவாஜி போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியிருப்பார் ரகுவரன். வில்லத்தினமான உடல்மொழியில் மிரட்டும் ரகுவரனின் இடத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் தொட்டுவிட முடியாது.
அஜித்
தமிழில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் அஜித் வில்லனாக மிரட்டி தனக்கென தனி அடையாளத்தை பதித்தது வாலி திரைப்படத்தில் தான். இந்தப் படத்தில் அஜித் டபுள் ஆக்சன் ரோலில் நடித்திருப்பார். ஒரு அஜித் அண்ணனாகவும் மற்றொரு அஜித் தம்பியாகவும் இந்தப் படத்தில் வருவார்கள். இதில் அண்ணன் அஜித் தான் வில்லன். அவர் தம்பி அஜித்தின் மனைவியான சிம்ரனை அடைவதற்காக செய்கிற வில்லத்தனமே இவரை தமிழ் சினிமாவில் தலை சிறந்த வில்லன்கள் பட்டியலில் சேர வைத்துள்ளது. அஜித்தை பொருத்தவரை ஆரம்பத்தில் காதல் மன்னனாக இருந்தாலும் போகப்போக negative shade கொண்ட ஹீரோக்கள் கதாபாத்திரத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் பில்லா, மங்காத்தா,துணிவு போன்ற படங்களைச் சொல்லலாம். ‘நானும் எவ்ளோ நாள்தான் நல்லவனாவே நடிக்குறதுனு’ மங்காத்தா படத்தில் இவர் பேசும் வசனம் இப்போதுவரை அல்டிமேட்தான்.!
நம்பியார்
வில்லாதி வில்லன்களுக்கெல்லாம் தமிழ் சினிமாவின் முக்கிய முன்னோடி நம்பியார் தான். ஆரம்பத்தில் சில நகைச்சுவை கதாபாத்திரங்கள் மற்றும் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவர் 60 களின் காலகட்டத்தில்தான் அளவுக்கு அதிகமான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் வில்லத்தனத்திற்கு எடுத்துக்காட்டாக சர்வாதிகாரி, எங்கள் வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி போன்ற பல எம் ஜி ஆர் படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அது தவிர அவர் சிவாஜியுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். எந்தளவுக்கு திரையில் கொடூர வில்லனாக நம்பியார் தென்பட்டாலும், நிஜவாழ்க்கையில் நம்பியார் ஒழுக்கத்துக்கு பேர் போனவர். தன்னுடைய சொந்த வாழ்க்கையை பொருத்தவரை நம்பியார் நல்ல ஒழுக்கங்களை பின்பற்றி வாழ்ந்தவராக அறியப்படுகிறார். அவரது ஆன்மீக ஈடுபாடு பற்றிய சொல்ல வேண்டுமென்றால் தொடர்ந்து 65 ஆண்டுகள் அவர் சபரிமலைக்கு சென்றுள்ளாராம் . நிஜ வாழ்க்கையில் இப்படியாக இருந்தாலும் அவர் சினிமாவில் எந்த அளவுக்கு வில்லனாக இருந்தார் என்றால் அந்த காலத்தில் எம்ஜிஆருக்கு என இருந்த ரசிகர் பட்டாளம் முழுவதும் நம்பியாரை வசை பாடிக் கொண்டே இருப்பார்களாம். இப்படியாக திரையில் வில்லனாக மிரட்டினாலும் நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவாகவே நம்பியார் இருந்திருக்கிறார்.! சுருக்கமாச் சொன்னால் வில்லன்களின் காட் ஃபாதர் நம்பியார்தான்.!
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் - ஷாருகான்! அதுவும் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ