தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?
Top Serials of Tamilnadu: தமிழ் தொடர்கள் பல, வயது வரம்பின்றி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளன.
காலங்களும் காட்சிகளும் மாற மாற, நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. முன்னர், வயது முதிர்ந்தவர்களும் நடுத்தர வயதினர் மட்டுமே தொலைக்காட்சி தொடர்களை அதிகம் பார்த்து வந்தனர். ஆனால், தற்போது பல இளைஞர்கள் விரும்பி சில டிவி தொடர்களை பார்த்து வருகின்றனர். காரணம், இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலும் பல சீரியல்களில் கதைகள் வர ஆரம்பித்து விட்டன. வெப் தொடர்கள், ஓடிடி தளங்கள் என தொலைக்காட்சி தொடர்களுக்கு மாற்று வழிகள் வந்து விட்டாலும், பலருக்கு சீரியல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அவ்வப்போது டிவி சேனலின் டிஆர்பியை வைத்து எந்த தொடர் ரசிகர்களின் மனங்களில் அதிகம் இடம் பிடித்துள்ளது என்ற தரவுகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், தற்போது புதிய தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், டாப் 5 இடங்களை பிடித்த தொடர்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
5. சிறகடிக்க ஆசை:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பிரபலமான ஒன்று, சிறகடிக்க ஆசை. பூ விற்கும் நாயகிக்கும், அடிதடி-சண்டை என திரியும் நாயகனுக்கும் இடையே உள்ள காதல்தான் கதை. பிரபல நடிகர் சுந்தர் ராஜன், இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கோமதி பிரியா, மீனா என்ற கதாப்பாத்திரத்திலும் அவருக்கு ஜோடியா வெற்றி என்ற கதாப்பாத்திரத்தில் முத்துக்குமாரும் நடித்துள்ளனர். அனிலா ஸ்ரீகுமார் மாமியார் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சீரியல் தினம் தினம் புதுப்புது ட்விஸ்டுகள் காத்துக்கொண்டுள்ளன. டாப் 5 டிவி தொடர்கள் லிஸ்டில், இந்த தொடர் 8.17 இடத்தை பெற்று 5வது இடத்தில் இருக்கிறது.
4.வானத்தை போல:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுள் ஒன்று, வானத்தை போல. இந்த தொடர், கடந்த 3 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன்-தங்கை பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள தொடர் இது. ஸ்வேதா, ஸ்ரீகுமார், மான்யா போன்றோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்த சீரியல் 8.95 புள்ளியை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் ஆதி குணசேகரனா இது..? மாரிமுத்துவின் பழையை புகைப்படங்கள்..!
3.சுந்தரி:
சன் டிவியையும் மக்களின் மனங்களில் இடம் பெற்றுள்ள தாெடர்களையும் பிரிக்கவே முடியாது. அப்படி மக்களை கவர்ந்த சன் டிவி சீரியல்களுள் ஒன்று சந்தரி. இந்த தொடரின் நாயகியாக கேப்ரியல்லா நடித்துள்ளார். அப்பாவியான கிராமத்து பெண்ணிடம் இருந்த ஆரம்பித்த இந்த கதை அவள் அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்து சிகரத்தை தொடும் கதையாக உருவெடுத்துள்ளது. இதில், ஜிஷ்னு மோகன், ஷஃப்னா, இந்துமதி, நிஹாரிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடர் 9.12 புள்ளிகளை பெற்று டாப் 5 தமிழ் தொடர்கள் லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
2.கயல்:
‘யாரடி நீ மோகினி’ தொடரில் வில்லயாக நடித்து பிரபலமான சைத்ரா ரெட்டி, கயல் தொடரில் வில்லயாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இந்த தொடரில் ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து பிரபலமான சஞ்சீவ் கார்த்திக் நடித்துள்ளார். தன் குடும்பத்தினருக்காக தனது மகிழ்ச்சிகளையும் ஆசாபாசங்களையும் தள்ளி வைக்கும் ‘கயல்’ என்ற பெண்ணை பற்றிய கதை இது. தினம் தினம் இந்த தொடரில் விறுவிறுப்பான கதைக்களம்தான். இந்த தொடர், 9.61 டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
1.எதிர்நீச்சல்:
தமிழ் நாட்டில் ‘எதிர்நீச்சல்’ தொடர் குறித்து தெரியாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த தொடரும் அதில் இடம் பெற்றிருந்த ‘ஆதி குணசேகரன்’ கதாப்பாத்திரமும் பிரபலமாகி விட்டது. இந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் மாரிமுத்து டப்பிங் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவையடுத்து இந்த தொடரில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், டாப் 5 சீரியலில் ‘எதிர்நீச்சல்’ தொடரே முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த தொடருக்கு 9.88 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. எதிர்நீச்சல் தொடரை திருசெல்வம் இயக்கியுள்ளார். ஹரிபிரியா, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல்: இனி மாரிமுத்துவுக்கு பதில் இவர் தானா...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ