தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை த்ரிஷா. 1999 ஆம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா. இதைத் தொடர்ந்து விக்ரமின் சாமி, விஜய்யின் கில்லி ஆகியப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். திரை உலகில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர் நடிகை த்ரிஷா. மேலும் சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் த்ரிஷா. தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை த்ரிஷா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல் தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா மேலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக திரையுலகில் நடித்து வருவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.



மேலும் படிக்க | அரசியல் களத்தில் களம் காணும் திரிஷா; தேசிய கட்சியில் ஐக்கியமாக திட்டம்


இந்த நிலையில் தற்போது நடிகை த்ரிஷா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் நமக்கு தெரிந்ததே. அந்த வகையில் நடிகை த்ரிஷா தனது தாயாருடன் குழந்தையாக இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று திடீரென இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் ரசிகர்கள் அள்ளிக்கொடுத்து வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது தாயாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை த்ரிஷா இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. 




இதற்கிடையில் அவரது மற்றொரு பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி அதில், வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டால் அது மிகவும் நல்லது. குப்பையே தன்னை வெளியே தூக்கி எறிந்து கொள்வது போல் அது உள்ளது என த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த கோபமான பதிவும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வீட்டை எல்லாம் இழக்கவில்லை.. ராக்கெட்ரி பெரிய வெற்றி ; மாதவன் போட்ட ட்வீட்



 


மேலும் படிக்க | மீண்டும் பிரபல கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ