மீண்டும் பிரபல கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

கோப்ரா படத்திற்குப் பிறகு அஜய் ஞானமுத்துவுடன் இன்னொரு படத்தில் நடிக்கிறேன் என்பதை சியான் விக்ரம் உறுதிப்படுத்தினார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2022, 04:02 PM IST
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா.
  • விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
மீண்டும் பிரபல கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம் title=

சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், இப்போது விக்ரம்-ஐ வைத்து கோப்ராவை உருவாக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் விக்ரமுடன் இந்த படத்தில் இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் 'கோப்ரா'வில் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பல்வேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2: காரணம் தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க!

அத்துடன், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் சியான் 61 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

Vikram's Tamil action-thriller 'Cobra' to arrive in theatres in August,  check out film's release date | Regional News | Zee News

மேலும் படிக்க | ’எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்’ அல்லு அர்ஜூனை பாராட்டும் ரசிகர்கள்

இந்த படங்களை தொடர்ந்து கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாக்கிட்டுள்ளது. இந்த நிலையில் அண்மையில் டிவிட்டர் ஸ்பேசில் கோப்ரா படக்குழுவினருடன் உரையாடிய விக்ரம், மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளேன் எனக் விக்ரம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பேசிய விக்ரம் நான் பல கெட்டப்களில் நடித்துள்ளதால், அதை மட்டும் நம்பி படம் பார்க்க வர வேண்டாம். இது அதை மட்டும் சார்ந்து எடுக்கப்படவில்லை என்றும், கோப்ரா எமோஷனல் ட்ராமாவாக இருக்கும், அது அனைத்து ரசிகர்களையும் கவரும் எமதிரும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

Trending News