2016ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நடிகராக இருந்து இசையமைப்பாளராக அவதாரம் எடுத்த விஜய் ஆண்டனி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக இன்னொரு முகத்தை காட்டியுள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் பாடல்கள் சில நாட்களுக்க முன்பு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் இந்த படம் பிச்சகாடு 2 என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதை என்ன? 


பிச்சைக்காரன் 2 படத்தில் பணக்காரன் ஒருவனுக்கு பிச்சைக்காரன் ஒருவரின் மூலையை வைத்து அறுவை சிகிச்சை செய்கின்றனர். அதன் பிறகு நடப்பவைதான் கதை. இது, படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியான போதே அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஒரு சிலர் இந்த கதையில் லாஜிக்கே இல்லை என்றாலும் ஒரு சிலரோ கதை மிகவும் புதிதாக இருப்பதாக கூறிவந்தனர். ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகியுள்ளது. 


ட்விட்டர் விமர்சனம்:


பிச்சைக்காரன் 2 திரைப்படம் அமெரிக்கா (USA Premiere) இந்தியாவில் வெளியாவதற்கு முன்னரே வெளியாகிவிட்டது. தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | மாறுப்பட்ட ஜோனர்..ஈர்க்கும் காட்சிகள்.. எறும்பு படத்தின் டிரெய்லர் இதோ


“இப்படி ஏமாத்திட்டீங்களே..”


பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அந்த படம் குறித்த விம்ரசனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “பிச்சைக்காரன் 2 படம் அதன் முதல் பாகத்துடையை கதையின் தொரர்ச்சி இல்லை” என குறிப்பிட்டுள்ளார். படத்திற்கான கதையுடன் டைட்டில் பொருந்தியுள்ளதாகவும் அண்டே பிக்கிலி என்ற தீம் மியூசிக்கின் ஐடியா சிறப்பாக இருப்பதாகவும் அந்த ரசிகர் கூறியுள்ளார். 



விஜய் ஆண்டனி இயக்கியுள்ள முதல் படம் என்றும் மொத்தமாக அவர் ஏமாற்றிவிட்டதாகவும் அந்த ரசிகர் கூறியுள்ளார். 


தெலுங்கிலும் நெகடிவ் விமர்சனங்கள்..


பிச்சைக்காரன் 2 படத்திற்கு தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்தை எதிர் நோக்கி தெலுங்கு சினிமா ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் “பிச்சைகாடு 2 படத்திற்கு USA ப்ரீமியர் ஷோவிலிருந்து நெகடிவ் விமர்சனம் வந்த வண்ணம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 



தெலுங்கு ரசிகர்கள் ஒரு சிலர் வெளியிட்டிருந்த ட்வீட்டுகளிலும் பிச்சைக்காரன் படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்களையே கொடுத்திருந்தனர். 


முதல் 50 நிமிடங்களிலேயே தூக்கம்:


படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒரு ரசிகர் தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 



“50 நிமிடங்களாக படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். முதல் 20 நிமிடங்களுக்கு எந்த திருப்பங்களும் இல்லாமல் படம் மிகவும் மெதுவாக செல்கிறது. இப்போது வரை படம் மிகவும் போர்தான் அடிக்கிறது” என்று அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 


ஒரு முறை பார்க்கலாம்.. 


பலர் பிச்சைக்காரன் 2 படம் குறித்து பல வகைகளில் நெகடிவ் விமர்சனங்களை கூறி வரும் வேலையில் ஒரு ரசிகர் மட்டும் படம் சுமாராக உள்ளது என ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.



“விஜய் ஆண்டனி கலக்குகிறார். ஆனால் படத்தில் புதிதாக அம்சங்களும் இல்லை. எப்போதும் போல ட்ராமாதான் நிறைந்துள்ளது. கதை சொல்லும் விதத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் படத்தை ஒருமுறை பார்க்கலாம்” என்றவாறு அந்த ரசிகர் எழுதியுள்ளார். 


சமூக கருத்தினை சொல்கிறதா?


பிச்சைக்காரன் பட்த்தின் முதல் பாகம் போல அதன் இரண்டாம் பாகம் இல்லை என ஒரு ரசிகர் கூறியுள்ளார். 



“ஜென்டில் மேன் படம் போல பிச்சைக்காரன் 2 படமும் சமூக கருத்தினைத்தான் கூறுகிறது. முதல் படத்தில் இருந்த உணர்வு ரீதியான அம்சங்கள் இதில் இல்லை...” என்று அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ‘பருத்திவீரன்’ புகழ் செவ்வாழை ராசு காலமானார்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகினர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ