பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. நஷ்ட ஈடாக பத்து லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி, ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் - 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.
மேலும் படிக்க | பிச்சைக்காரன் 2 விபத்து என்னை வலிமையாக்கியுள்ளது - விஜய் ஆண்டனி!
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில், பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்தார். அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழுடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் பிச்சைக்காரன் 2 படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. பிச்சைகாரன்-2 படம் மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனி அவரே இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு வீஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்ட 'பிச்சைகாரன்' படத்தின் தொடர்ச்சியாக 'பிச்சைக்காரன் 2' படம் இருக்குமோ என்று பலரும் நினைத்து வரும் நிலையில் விஜய் ஆண்டனி சில விஷயங்களை கூறி தெளிவுபடுத்தி இருக்கிறார்.
பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்
#ZeeTamilNews #Pichaikkaran2 #Pichaikaran2Release #ChennaiHighCourt #CinemaUpdateAndroid Link: https://t.co/3Qd30JcqXx
Apple Link: https://t.co/TNhzAUNkzw pic.twitter.com/ZP08aQZcFl— Zee Tamil News (@ZeeTamilNews) May 5, 2023
பட வெளியீட்டுக்கு முன்னதாக, 'பிச்சைகாரன்-2' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது பேசியவர், "நான் ஒரு படத்தை இயக்கத் திட்டமிடவில்லை, நான் படத்திற்கான கதையை எழுதி அதனை சசி சாரிடம் கொண்டுபோய் கொடுத்தேன், ஆனால் அவர் அந்த சமயத்தில் வேறொரு திட்டத்தில் பிஸியாக இருந்தார். அதன் பின்னர் நான் மற்றொரு இயக்குநரிடம் அணுகினேன், அவரால் இந்த படத்தை எடுக்கமுடியவில்லை. உடனே நானே இந்த படத்தை இயக்க முடிவு செய்து, அதன்படி இயக்குனராக மாறிவிட்டேன் என்று கூறினார். மேலும் 2016-ம் ஆண்டு வெளியான 'பிச்சைகாரன்' படத்தின் தொடர்ச்சி 'பிச்சைக்காரன் 2' அல்ல என்பதையும் விஜய் ஆண்டனி தெளிவுபடுத்தி இருக்கிறார். 'பிச்சைக்காரன்' படம் தாய்-மகன் உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாகக் கொண்டிருந்தது, ஆனால் 'பிச்சைகாரன்-2' படம் அண்ணன்-தங்கை உறவுகளுக்கிடையேயான உணர்ச்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
'பிச்சைக்காரன்-2' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடத்தப்பட்ட போது எதிர்பாராத விஜய் ஆண்டனி ஒரு விபத்தில் சிக்கி கொண்டார். விபத்தில் சிக்கி கொண்ட விஜய் ஆண்டனியின் உடல்நிலை எப்படி உள்ளது என்பதை நினைத்து அவரது ரசிகர்கள் சோகமாக இருந்து வந்தனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஆண்டனி தனது விபத்து குறித்தும் பேசியுள்ளார். விபத்து குறித்து அவர் கூறுகையில், பொதுவாக ஆக்ஷன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் செய்யும் போது விபத்துகள் அதிகம் நடப்பது இயல்பு தான், ஆனால் ஒரு காதல் பாடல் படப்பிடிப்பின் போது நான் விபத்துக்குள்ளானேன். ஜெட் ஸ்கீயிங் செய்யும் போது எனது பைக் ஒளிப்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளர் இருந்த மற்றொரு பைக்கின் மீது வேகமாக மோதிவிட்டது. அந்த விபத்தில் எனக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது, அந்த விபத்தில் பெரியளவில் ஆபத்து ஏற்பட்டுவிடாமல் என்னைக் காப்பாற்றிய படத்தின் கதாநாயகி காவ்யா மற்றும் கேமரா உதவியாளர் அர்ஜுன் ஆகியோருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இப்போது எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது, இந்த விபத்திற்குப் பிறகு நான் மனதளவில் பலசாலியாக இருப்பதாக உணர்கிறேன். நான் ஒரு புதிய நபராக மாறியது போல உணர்கிறேன், வாழ்க்கையில் பல விஷயங்களை சாதிக்கும் அளவிற்கு எனக்கு அதிக நம்பிக்கை கிடைத்துவிட்டது போன்று நான் உணர்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பேசியவர், எதிர்காலத்தில் தான் இயக்கப்போகும் படங்களில் மற்ற நடிகர்களை வைத்து இயக்க விரும்புகிறேன். நான் நடுத்தர நடிகனாகவே இருப்பதால் எனக்கு பெரிய இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வரவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஸ்கிரிப்ட்களை மட்டுமே தேடிக்கொண்டிருக்கிறேன், ஆரம்பத்தில் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்தால், புதுமுகங்கள் நிறைய பேருக்கு வாய்ப்பளித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஜெஸ்ஸி டூ குந்தவை..ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷாவின் கதாப்பாத்திரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ