2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி (Vijay Antony) நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. இது அதிரடித் திரைப்படம் வகையைச் சார்ந்ததாகும். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இருந்தார்.  சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர். தெலுங்கு மொழியில் பிச்சாகடு என்ற பெயரில் 13 மே 2016-ம் ஆண்டு வெளிவந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படம் மூலன் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் விஜய் ஆண்டனிக்கு முன்னணி நாயகன் அந்தஸ்து கிடைத்தது.



அந்தவகையில் 'பிச்சைக்காரன் 2' படத்துக்கான கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதி முடித்துள்ளார். இந்த படத்தை கடந்த ஆண்டு தேசிய விருது வென்ற 'பாரம்' படத்தின் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


 


ALSO READ | விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக வெளியான தகவல்?...


 



 


இந்நிலையில், இன்று விஜய் ஆண்டனியின் (Vijay Antony) பிறந்த நாளை முன்னிட்டு 'பிச்சைக்காரன் 2' (Pichaikaran 2) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ளது.


 



 


ALSO READ | நல்ல வரவேற்ப்பை பெற்ற "கொலைக்காரன்" படத்தில் ட்ரைலர்!!


இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். விரைவில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கவுள்ளவர்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.