அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்துக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.
விஜய் நடித்துள்ள பீஸ்ட் வரும் 13ஆம்தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடைவிடுமுறை விருந்தாக வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்துக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. தமிழ் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக பீஸ்ட், இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் வெளியாகவுள்ளது. சமீப காலமாக நடிகர் விஜய்யின் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வசூலை வாரிக் குவித்துவருவதால் இப்படத்துக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு அடுத்தபடியாக மிகவும் எதிர்பார்க்கப்படும் நாடுகளில் ஒன்று அமெரிக்கா. அந்நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு குறிப்பிட்ட அளவு மவுசு உள்ளதால் அமெரிக்க வசூலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்சன்கள் மட்டும் அமெரிக்காவில் வெளியாகவுள்ளன. அந்த வகையில் பீஸ்ட் படம் அமெரிக்காவில் மட்டும் 426 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம்.
மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!
அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படம்தான் அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியான விஜய் படமாக இருந்துவந்தது. இந்நிலையில் அந்த சாதனையை பீஸ்ட் படம் தற்போது உடைத்துள்ளதாம். விஜய்யின் முந்தைய படங்கள் அமெரிக்காவில் நல்ல வசூல் செய்ததால் பட ரிலீசுக்குப் பின்னர் தியேட்டர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. 500 திரையரங்குகளைத் தாண்டினாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லையாம்.
மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR