இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்- இவர் 'டான்', 'தலாஷ்', மற்றும் 'அந்தாதூன்' போன்ற வெற்றி பெற்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'மகரிஷி' திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' எனும் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை பரசுராம் பெட்லா இயக்கியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சித்தார்த் - அதிதி ஜோடி!


'ஃபேமிலி ஸ்டார்' திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன் பகிர்ந்து கொண்டார். ''சினிமா பள்ளியில் ஒளிப்பதிவினை கற்றுக் கொண்டேன். கேமராவை பயன்படுத்துவதற்கான அனைத்து பயிற்சிகளையும் முறையாக பெற்றிருக்கிறேன். மேலும் கூடுதலான சில விசயங்களை உலக சினிமாக்களை பார்வையிடுவதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். பல வருடங்களாக தெலுங்கு சினிமாக்களை பார்த்து வருகிறேன். கிருஷ்ணாவின் திரைப்படங்களையும், புராண கதைகளைக் கொண்ட படங்களையும் தான் அதிகமாக பார்ப்பேன். நாம் அனைவரும் அடிப்படையில் வணிகத்தனம் கொண்டவர்கள். அதனால் தான் வாழ்க்கையை விட திரைப்படங்கள் பெரிது என நினைக்கிறோம். 



அதனால் தான் ஒளிப்பதிவின் அடிப்படையில் காட்சிகள் மிகவும் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒளிப்பதிவு என்பது ஒரு திறமை. அதற்கென்றொரு அழகியல் உணர்வு உள்ளது. காட்சியியல் உணர்வும் உண்டு. இதனை நாங்கள் எங்களுக்கான படைப்புகளில்... திரைப்படங்களில் பயன்படுத்துகிறோம்.  ஒரு திரைப்படத்திற்கு தேவையானது என்றால் மட்டுமே புதிய உபகரணங்களை பயன்படுத்துகிறேன். இந்த புதிய லென்ஸை பயன்படுத்தினேன். இந்த புதிய கேமராவை பயன்படுத்தினேன் என்று சொல்ல முயலவே இல்லை. எந்த மாதிரியான காட்சிகள் தேவைப்படுகிறதோ.. அதை மட்டுமே எடுக்கச் சொல்கிறார்கள். அந்தப் படம் மற்றும் அதற்கு என்ன உபகரணங்கள் தேவையோ.. அதை மட்டுமே பயன்படுத்துகிறேன். 


'ஃபேமிலி ஸ்டார்' படம் ஒரு அழகான திரைப்படம். ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனின் கதை. குடும்பத்திற்காக அவர் ஆற்றும் கடமையை நல்ல மெசேஜுடன் சொல்லி இருக்கிறோம். காலனி போன்ற ஒரு அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினோம். கதை மற்றும் கதாபாத்திரங்கள் இயல்பானவை என்பதை பிரதிபலிக்கும் வகையில் காட்சி அமைப்பை உருவாக்கியுள்ளேன். ட்ரோன் காட்சிகள் இல்லை. 'ஃபேமிலி ஸ்டார்' படத்திற்கு தேவையில்லாத எந்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும் இல்லை. படத்தை இயற்கையான ஒளி அமைப்பில் படமாக்கி இருக்கிறோம். 


அதனால் படம் பார்க்கும் பொழுது காட்சிகள் அழகாக இருப்பதை காண்பீர்கள். நடுத்தர வர்க்கத்து வீட்டின் அமைப்பை நீங்கள் திரையில் பார்த்தால்... உங்களுடைய வீடு போல் தெரியும். இந்தப் திரைப்படத்தின் கதை கள பின்னணியை எளிமையான அமைப்பில் இயக்குநர் பரசுராம் உருவாக்கி இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவும் மிருனாள் தாக்கூரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். படத்தில் இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் எங்களுக்கு நிறைவான பங்களிப்பை வழங்கினர்.  


மேலும் படிக்க | விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிக்கும் பேமிலி ஸ்டார்! வெளியானது 3வது சிங்கிள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ