விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படம்! இயக்குனர் யார் தெரியுமா?
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவாக இப்படத்தின் ஷூட்டிங் முடிய உள்ளது.
மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறிவிட்டார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் இப்போது தனது திறமையால் உயர்ந்து பல ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென்று பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இவர் வில்லனாகவும் சில படங்களில் நடித்து மிரட்டியுள்ளார். ரசிகர்கள் பலருக்கும் இவரை கதாநாயகனாக பார்ப்பதை விடவும் வில்லனாக பார்ப்பது தான் பிடித்திருக்கிறதாம். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தவர் தற்போது 50 படங்களின் மைல்கல்லை எட்டியுள்ளார்.
மேலும் படிக்க | ருத்ரன் படத்தின் ருத்ரதாண்டவம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
2017ம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் சுவாமிநாதன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியானது. நித்திலன் சுவாமிநாதன்-விஜய் சேதுபதி இணையும் இந்த புதிய படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'மகாராஜா' என்று பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், தற்போது இப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாக அமையும் என்று லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுதன் கூறுகையில், "நாங்கள் உருவாக்கும் படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்பது எங்களுக்கு பெரிய ஆச்சர்யமாக இருந்தது. பழிவாங்கும் எண்ணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரண்டு கதாபாத்திரங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு தனித்துவமாக காணப்படுகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை 85 நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்தோம், தற்போது 50 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த 10 நாட்களில் விஜய் சேதுபதி இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்படும்" என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படத்தில் நட்டி நட்ராஜ், பாய்ஸ் மணிகண்டன், அருள் தாஸ் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகிய இரண்டு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் காந்தாரா பட புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார் மற்றும் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்
மேலும் படிக்க | திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ