தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு கடந்த இரு வாரமாக முழு ஊடரங்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் (Tamil Nadu) முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். அந்தவகையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தாராளமாக நிதிகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதைத்தொடா்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister Relief fund) பலா் நிதியளித்து வருகின்றனர். 


ALSO READ | விஜய் சேதுபதி படத்தின் மாஸ் அப்டேட்: ட்விட்டரில் பகிர்ந்தார் யுவன் ஷங்கர் ராஜா!!


இந்த கொரோனா நிதி ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) ரூ. 25 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவியை வழங்கினார் விஜய் சேதுபதி.


ALSO READ | Masterchef Tamil நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார் விஜய் சேதுபதி: ரசிகர்கள் குதூகலம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR