பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் - விஜய் சேதுபதி
காவிரி நதி நீர் பிரச்சினை உட்பட பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி, தமிழக ஆளுநரிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை விடுக்கும் வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சினை உட்பட பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி, தமிழக ஆளுநரிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை விடுக்கும் வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி (Rajiv Gandhi) படுகொலை வழக்கில் ஏழு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யக் கோரி ஒரு சமூக ஊடக பிரச்சாரம் நடந்து வருகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் பார்த்திபன், நடிகர் விஜய் ஆண்டனி உள்பட பலர் ஏற்கனவே இது குறித்து தங்களது சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இன்று காலை முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ALSO READ | விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த மனநோயாளி மீது சைபர் கிரைம் வழக்கு பதிவு
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்., உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். அற்புதம்மாள் அவர்களின் 29 ஆண்டு போராட்டம் இது. குற்றமற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ALSO READ | Rajiv கொலை வழக்கு: 7 குற்றவாளிகளின் விடுதலையில் ஆளுநர் மீது தமிழக அமைச்சர்கள் நம்பிக்கை!