ஹிந்தியில் வெளியாகும் வாரிசு! தலைப்பு என்ன தெரியுமா?
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் `வாரிசு` படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
2023ம் ஆண்டு தொடக்கமே இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மோதிக்கொள்ள காத்திருக்கிறது, பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்களில் வெளியாகி விஜய்யின் தோற்றம் ரசிகர்களை பெரிது கவர்ந்திருந்தது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் முதல் சிங்கிள் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது, இந்த பாடல் பலரது ப்ளே லிஸ்டிலும் முதலிடம் வகிக்கின்றது. இப்படத்தின் அடுத்த பாடலுக்க்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது 'வாரிசு' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | துணிவு படம் உருவானது இப்படித்தான் - இயக்குனர் ஹெச்.வினோத்!
வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி, 'வாரிசு' படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மொழியில் உருவாக்கப்படும் இந்த படம் எப்படி தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது அதேபோன்று ஹிந்தி மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டியொன்றில் கூறுகையில், 'வாரிசு' படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஹிந்தியில் வெளியாகப்போகும் இந்த படத்திற்கு 'வாரிஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் 'வாரிசு' படம் ஹிந்தி மொழியில் வெளியாவது குறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை, அதேசமயம் இப்படம் ஹிந்தியில் வெளியானால் இது விஜய்யின் மூன்றாவது ஹிந்தி படமாகும், இதற்கு முன்னர் 'மாஸ்டர்' மற்றும் 'பீஸ்ட்' ஆகிய படங்கள் ஹிந்தி மொழியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, குஷ்பூ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | விஜய்க்கு வில்லனாக அழைத்த லோகேஷ் கனகராஜ்... மறுத்துவிட்ட கார்த்திக்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ