விக்ரம் பிரபு நடிப்பில் உருவான டாணாக்காரன் படம் ஏப்ரல் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படமும், மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பரில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படமும் தனக்கு மிகப்பெரிய அளவில் திருப்புமுனையைத் தரும் என்று பெரிய அளவில் நம்பிக் கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கும்கி படத்தின் மூலம் திரையலகில் அறிமுகமானார் விக்ரம் பிரபு. தாத்தா சிவாஜி, தந்தை பிரபுவின் வழியில் ஹீரோ ஆனவர் அரிமா நம்பி, சிகரம் தொடு உள்ளிட்ட சிறந்த கதைப் படங்களில் நடித்து கவன ஈர்ப்பை ஏற்படுத்தினார். இது என்ன மாயம் படம் சரியாகப் போகாவிட்டாலும் எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த வெள்ளைக்கார துரை கமர்ஷியல் ஹிட் அடிக்க, அப்படியே ரூட்டை மாற்றிக் கொண்டார். 


மேலும் படிக்க | விஜய் பாடியிருக்கும் ‘பீஸ்ட்’ செகண்ட் சிங்கிள் - ரிலீஸ் தேதி அறிவிப்பு


வாகா, வீரசிவாஜி, சத்ரியன், நெருப்புடா, பக்கா, 60 வயது மாநிறம் என வதவதவென நிறைய படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. துப்பாக்கி முனை கதை ஓரளவு சுமாரான வரவேற்பைப் பெற்றது. வானம் கொட்டட்டும், அசுரகுரு, புலிக்குத்தி பாண்டி என அடுத்தடுத்து நடித்தாலும் விக்ரம் பிரபுவின் பெயர் சொல்லும்படியான  படங்களாக மாறவில்லை. இந்தக் குறைகள் அனைத்தையும் டாணாக்காரன், பொன்னியின் செல்வன் படங்கள் சரிசெய்துவிடும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு.



ஜெய் பீம் படத்தில் காவல்துறை அதிகாரி குருமூர்த்தியாகவும், அசுரன் படத்தின் இடைவேளை சண்டைக் காட்சியில் தனுஷையும் அவரது மகனையும் புரட்டிப் போடும் முரட்டு வில்லனாகவும் தடம் பதித்த தமிழரசன், டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் தமிழ், இதற்கு முன் தமிழக காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த அனுபவத்தைக் கொண்டு காவல்துறைப் பயிற்சியைக் கதைக்களமாகக் கொண்டு பல சுவாரஸ்யமான சம்பவங்களைக் கோத்து வித்தியாசமான கோணத்தில் படமாக்கியுள்ளார். டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் டாணாக்காரன் அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும் என்று இயக்குநர் தமிழரசன் கூறியுள்ளார். 


விக்ரம் பிரபு இப்படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். ஏற்கெனவே காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இப்படம் அவரது திரையுலக வாழ்க்கையைச் செதுக்கும் படமாக இருக்கும் என்று இயக்குநர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அஞ்சலி நாயர் நாயகியாகவும், லால், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


ஏப்ரல் 2022ல் டாணாக்காரன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் பிரபு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனால் இந்த இரு படங்களும் தனக்கு மிகப்பெரிய அளவில் திருப்புமுனையைத் தரும் என்று விக்ரம் பிரபு காத்திருக்கிறார். 


மேலும் படிக்க | ஹெச்.வினோத்தை ஓவர்டேக் செய்யும் விக்னேஷ் சிவன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR