விஜய் பாடியிருக்கும் ‘பீஸ்ட்’ செகண்ட் சிங்கிள் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

இளைய தளபதி விஜய் பாடியிருக்கும் பீஸ்ட் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:44 AM IST
விஜய் பாடியிருக்கும் ‘பீஸ்ட்’ செகண்ட் சிங்கிள் - ரிலீஸ் தேதி அறிவிப்பு title=

இளைய தளபதி விஜய் - நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ’பீஸ்ட்’ அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஏறத்தாழ ஒரு மாதம் மட்டுமே ரிலீஸூக்கு இருப்பதால், அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அண்மையில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நெல்சன் திலிப்குமாரிடம், விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட பீஸ்ட் அப்டேட் கேட்டிருந்தார். இதனால், பீஸ்ட் அப்டேட் எப்போது? என சோஷியல் மீடியாவில் தீப்பொறி பறந்தது.

மேலும் படிக்க | பீஸ்ட்’டில் விஜய்யின் காஸ்ட்யூம் இதுவா?!

இந்நிலையில், பீஸ்ட் அப்டேட் குறித்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பீஸ்ட் செகண்ட் சிங்கிள் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தப் பாடலை இளைய தளபதி விஜய் பாடியிருக்கிறார். அதற்காக வெளியிடப்பட்டிருக்கும் புரோமோவில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் இளையதளபதி விஜய் ஆகிய மூன்று பேரும் ஜாலியாக அந்தப் பாடலை பாடி நடனமாடியுள்ளனர். ‘ஜாலியோ ஜிம்கானா’ புரோமோ டிவிட்டரில் இப்போது டிரெண்டாகியுள்ளது.

மேலும் படிக்க | ஷமியிடம் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்: வைரல் வீடியோ!

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘அரபிக் குத்து’ பாடல் உலக டிரெண்டாகியுள்ளது. இதுவரை சுமார் 178 மில்லியன் முறை அந்தப் பாடல் யூடியூப்பில் பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அதிக யூடியூப் பார்வைகளைப் பெற்ற பாடலாகவும் அரபிக் குத்து உள்ளது. சிவகார்த்திகேயன் எழுதிருயிருந்த அந்தப் பாடல் இந்தளவுக்கான வரவேற்பை பெறும் என படக்குழுவே எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், விரைவில் வெளியாக இருக்கும் பாடலை விஜய் பாடியிருப்பதால், பீஸ்ட் செகண்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஜாலியான பாடலாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News