சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்தியபாமா கல்லூரியில் 4 வது முறையாக நடைபெறும் மிகப்பெரிய கிராமத் திருவிழாவான வில்லேஜ் டிக்கெட் இன்று துவங்கி மே 7-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.  தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் கலாச்சாரத்தையும் பல்வேறு கலை வடிவங்களையும், தனித்துவமான உணவுத்தயாரிப்பு முறைகளையும், உணவுகளையும் மற்றும் உணர்வுகளையும் உயிரோட்டத்துடன் கண்முன் காட்சி படுத்தினார்கள்.  உலகம் முழுவதும் புகழ் பெற்ற தமிழ்நாட்டின் சக்தி மசாலா நிறுவனம் இந்த ஆண்டு நிகழ்விற்கான டைட்டில் ஸ்பான்சராக இணைந்துள்ளது.   தமிழ்நாட்டின் கிராமங்களில் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு வரும் ஆரோக்கியமான உணவு கலாச்சாரம், நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விளையாடப்பட்ட, தமிழ் மண்ணுக்கே உரிய விளையாட்டுகள், பழங்கால கிராமப்புற வீடுகள், பெட்டி – கடை, பஞ்சாயத்து அமைப்பு முறை, மைய மேடை மற்றும் வியப்பூட்டும் அற்புதமான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கிராமப்புற வாழ்க்கையோடு இணைந்திருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் நகர்ப்புற மக்களுக்கு நினைவூட்டி, அறிமுகப்படுத்தி அதற்கு புத்துயிர் அளிப்பதே வில்லேஜ் டிக்கெட் நிகழ்வின் நோக்கமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தி கேரளா ஸ்டோரி படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் சொன்ன ரிவியூ!


தமிழ்நாட்டின் கிராமங்களின் வாழ்க்கை, கலை மற்றும் கலாச்சாரத்தை சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் அனுபவித்து உணரவும், ரசித்து மகிழவும் ஒரு தனிச்சிறப்பான வாய்ப்பை வில்லேஜ் டிக்கெட் வழங்குகிறது.  இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.  பின்னர் மாட்டுவண்டி பயணம், அய்யனார் சாமியை கும்பிட்டு, கொம்பு சுற்றுவதையும் பார்வையிட்டு, கழனியில் நாற்று நடுதல் உள்ளிட்டவற்றை உற்சாகத்துடன் செய்தார்.  பின்னர் மறைந்த நடிகர் மனோபாலாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் மேடையில் பேசிய நடிகர் விஷால் அவர்கள்: வில்லேஜ் டிக்கட் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிகவும் நன்றியை கடமைப்பட்டிருக்கிறேன் அதற்காக தெரிவித்துக் கொள்கின்றேன். விவசாயிகள் சேற்றில் காலை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.


வில்லேஜ் டிக்கட் நிகழ்ச்சியை சென்னையில் வையுங்கள் என்றும், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  சென்னைக்கும், கிராமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. கிராமத்தில் இருப்பவர்கள் கஷ்டப்பட்டு வயலில் வேலை செய்து நமக்கு உணவு அளிப்பதற்கு அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நாம் அதைப்பற்றி சில நேரங்களில் கவலை படுவதில்லை.  விவாசயின் வாழ்க்கை நம்மை மாதிரி சொகுசான வாழ்க்கை இல்லை என்றும், அனைத்திற்கும் பணம் தேவை.  நான் கடைசியாக நடிகை ஹாண்டிரியாவுடன் நடிக்கும் போது குடை பிடிக்கும் பையனிடம் கேட்டேன்,எ ன்ன வேலை செய்கிறாய் என்று கேட்டதற்கு நான் விவசாயம் செய்பவன் என்று கூறினான். அவனை விவசாயம் செய்ய சொன்னேன். விவசாயம் செய்வதற்கு பணம் இல்லை, அதனால் தான் இந்த வேலைக்கு வந்தேன் என்று தெரிவித்தான்.


நீங்கள் ஓவ்வொருவரும் கொடுக்கும் பணம் அரசுக்கு வரியாக போகிறது, என்னுடைய படத்தை பார்க்கின்ற அனைவரது சார்பாகவும் ஓவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாயை எடுத்து நான் விவசாயிக்கு கொடுக்கிறேன் என்றும், ஏனென்றால் என்னால் எல்லாரையும் காப்பாற்ற முடியாது, நீங்கள் அனைவரும் கை கொடுத்தால் சேர்ந்து காப்பாற்ற முடியும்.  சிலப்பட்டாம் மற்றும் தாரை தப்பட்டை அடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், இந்த சத்தத்தை கேட்டதும் நீங்கள் யாரும் இல்லை என்றால் நான் டான்ஸ் ஆடி இருப்பேன் என்றும் தெரிவித்தார்.  இந்த சத்தியபாமா கல்லூரிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கேட்டவுடன் என்னுடைய தங்கச்சிகளை இலவசமாக சேர்த்துக் கொண்டார்கள். இந்த கல்லூரியில் படிக்கும் பெருமை எனது தங்கச்சிகளுக்கு உண்டு.  நான் எந்த கல்லூரிக்கு சென்றாலும் கல்லூரி முதல்வர் கிட்ட பிச்சை கேட்பேன். எனது தங்கச்சிகளுக்காக, எனது தங்கச்சிகள் சத்தியபாமா கல்லூரியில் படிப்பதை மிகவும் நான் சந்தோசமடைகிரேன்.  பணம் கொடுத்து இவ்வளவு சீட் வேண்டுமானால் வாங்கலாம், ஆனால் என்னுடைய தங்கச்சிகளுக்காக நான் கல்லூரி முதல்வரிடம் பேசி சீட் வாங்கினேன் என்று பேசும் போது கண் கலங்கினார்.


குறிப்பாக பெற்றோர்கள் இசிஆர் பகுதி, ரைடு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்றும், ஒரு நாள் மட்டும் குழந்தைகளை வயல் வெளியில் விடுங்கள் என்றும், அவர்கள் வளரும் போதே எங்கே இருந்து நமக்கு உணவு வருகிறது என்று தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  இந்த மாபெரும் கிராமிய விழாவில், நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், ஃப்ரீஸ்டைல் நடனம், மிமிக்ரி நிகழ்ச்சி மற்றும் கலாச்சார பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்று கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கின்றனர்.  அதே நேரம் தலை வாழை இலையில் 32 வகை அசைவ உணவுகளும், கலியாண விருந்தில் பரிமாறப்படும் 32 வகை சைவ உணவும் தமிழ்நாட்டின் தலைசிறந்த சமையல் கலைஞர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட உள்ளன.  காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கட்டணமாக 200 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | சமந்தா தினமும் கேட்கும் மந்திரம் இதுவா... அவரே போட்ட பதிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ