தலை தீபாவளி கொண்டாடும் நயன் விக்னேஷ் தம்பதிகள்! குழந்தைகளுடன் வெளியிட்ட முதல் வீடியோ!
Nayanthara First Diwali With Family: தலை தீபாவளிக்கு இரட்டைக் குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் தம்பதிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகிறது
சென்னை: தலை தீபாவளிக்கு இரட்டைக் குழந்தைகளுடன் நயன் விக்னேஷ் தம்பதிகள் வீடியோவை வெளியிட்டுள்ளனர். நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில, சில நாட்களுக்கு முன்னர், முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன், ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம் என்று தெரிவித்திருந்தார். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
தற்போது, விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களில், இரட்டைக் குழந்தைகளை தூக்கியவாறு தம்பதிகள் நின்றுக் கொண்டிருக்கின்றனர். அதில், ”என்றென்றும் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று தீபாவளி வாழ்த்தையும் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா?... வெளியான தகவல்
ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். நயன் - விக்கி விவகாரம் இதனையடுத்து சூடு பிடிக்க, அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என்று தெரியவந்தது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக பல வகையான சர்ச்சைகள் தொடரும் நிலையில், தலை தீபாவளி கொண்டாடும் நயன்தாரா-விக்னேஷ் தம்பதிகள், குழந்தைகளுடன் இருக்கும் முதல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அது வைரலாகிறது.
மேலும் படிக்க | குழந்தை திருமணத்திற்கு ஆதரவு... தீட்சிதர்கள் அதிரடி கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ