செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சின்னத்திரை தொடர் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான மற்றும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.  இவர் தமிழில் வைபவ் ஜோடியாக 'மேயாத மான்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்தது, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, யானை போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.  சமீபத்தில்  தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்'படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும், ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது  மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் பொம்மை. நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொம்மை திரைப்படம் இன்று உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.


மேலும் படிக்க | முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைக்கும் ‘வாரிசு’ பட தயாரிப்பாளர்: படம் ஹிட் கன்பார்ம்


இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிக்கயுள்ளனர். ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது. ஏற்கனவே விஷால் நடிப்பில் உருவான ’தாமிரபரணி’ ,’பூஜை’ ஆகிய படங்களை ஹரி இயக்கிய நிலையில் இருவரும் இணையும் மூன்றாவது படம் இது என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த நிலையில் மீண்டும் ஹரி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மெகா கூட்டணி அசத்தலாக ஹிட்டடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையில் தற்போது நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். எஸ்.ஜே. சூர்யா இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜுலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா கடத்தல்? வைரலாகும் வீடியோவால் மக்கள் அதிர்ச்சி..!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ