புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவரது கணவர் என்று சொல்லப்பட்ட ஹேம்நாத்தான் அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்தார். அதனால் சந்தேகம் அவர்பக்கம் திரும்பியது. சித்ராவின் பெற்றோரும் ஹேம்நாத்-தான் சித்ராவை கொலை செய்துவிட்டார் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒருபுறம் இருக்க, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஹேம்நாத் காவல்நிலையத்திலும் ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தார். சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதி ஒருவருக்கு தொடர்பிருப்பதாகவும் ஹேம்நாத் கூறிவந்தார். ஆனால் இவையனைத்தும் பொய் என்று ஹேம்நாத் தனது மகளை அடித்தே கொன்றுவிட்டார் என்றும் சித்ராவின் பெற்றோர் கூறி வருகிறார்கள்.


மேலும் படிக்க | வளசரவாக்கம் கொலை: சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற விவகாரத்தில் தடவியல் சோதனை


இந்த நிலையில் விஜே சித்ராவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்றும் ஹேம்நாத் பொய் சொல்கிறார் என்றும் புதிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், இந்த தகவலை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியாக அளித்துள்ளார். சூளைமேட்டில் ஒரு ஹோட்டலில் திருமணம் நடந்ததாக கூறி ஹேம்நாத் திருமணத்தை பதிவு செய்ததாகவும் ஆனால் சூளைமேட்டில் அப்படி ஒரு ஓட்டலே இல்லை என்றும் வரதராஜன் கூறுகிறார்.


இதுதொடர்பாக ஐந்து மாதங்களுக்கு முன்பே சித்ராவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக கூறும் வரதராஜன், காவல்துறையினர் ஹேம்நாத்துடன் சேர்ந்துகொண்டு தகவல்களை மறைப்பதாக தெரிவிக்கிறார். சித்ரா மரணம் தொடர்பாக இன்னும் பல தகவல்கள் வெளிவராமலேயே இருக்கின்றன.


மேலும் படிக்க | யூடியூப் பார்த்து ஏடிஎமை கொள்ளையடித்த டீ கடை ஓனர்! பொறி வைத்து பிடித்த போலீஸார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe