வளசரவாக்கம் கொலை: சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற விவகாரத்தில் தடவியல் சோதனை

சொத்துக்காக மகனே தந்தையை கொலை செய்த சம்பவத்தில் தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 20, 2022, 11:05 AM IST
  • வளசரவாக்கம் கொலை வழக்கில் தடவியல் சோதனை
  • தந்தையைக் கொன்ற மகன்
  • தலைமறைவான மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
வளசரவாக்கம் கொலை: சொத்துக்காக தந்தையை மகன் கொன்ற விவகாரத்தில் தடவியல் சோதனை title=

சென்னை: சொத்துக்காக மகனே தந்தையை கொலை செய்த சம்பவத்தில் தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

78 வயதான முதியவர் குமரேசன் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். அவருக்கும் அவரது மகனுக்கும் சொத்து தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், சொத்துத்தகராறில் தந்தையை மகனே வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

78 வயதான தந்தையை துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்து காவேரிப்பாக்கம் அருகே புதைத்த மகனை போலீசார் தேடிவந்தனர்.

தந்தை குமரேசனை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன் குணசேகரனை வளசரவாக்கம் போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

மேலும் படிக்க | மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியை!

காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் முதியவர் குமரேசன் கொலை செய்யப்பட்ட வீட்டில், வளசரவாக்கம் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தந்தையை கொலை செய்த குணசேகரன், அவரது உடலை புதைப்பதற்காக காவேரி பாக்கத்தில் மூன்று ஏக்கரில் அண்மையில் இடம் வாங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சியரின் பெயரில் மோசடி செய்யும் மர்ம கும்பல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News