2019ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல், யோகிபாபு நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.  அறிமுக படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் பிரதீப்.  90's மற்றும் 80's கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டும் விதமாக இந்தப்படம் அமைந்து இருந்தது.  வேல்ஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது.  கோமாளி படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது, தனது இரண்டாவது படமாக,'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி, அதில் நடிக்கவும் செய்துள்ளார். இத்திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | புஷ்பா 2: ஹீரோயின் மாற்றம் இல்லையாம்! கொண்டாட்டத்தில் ராஷ்மிகா போட்ட ட்வீட்



லவ் டுடே திரைப்படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளும், பிரமோஷன் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் நேற்று வெளியிடப்பட்டது. 'பச்சை இலை' இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பாட்டின் லிரிக்கல் வீடியோ யூ-ட்யூபில் வெளியான ஒரே நாளில், 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது. இதற்கு முன்னர் வெளியான 'சாச்சுட்டாளே', 'என்னை விட்டு' ஆகிய பாடல்கள் யூ-ட்யூபில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. 


இந்த பாடல் போதை வஸ்துகள் தொடர்புடைய வரிகளை கொண்டுள்ளதாகவும், அதனை ஊக்கப்படுத்தும் வகையிலும் இருப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து, அதுகுறித்து பேச்சுகளுக்கு பதிலளிக்கும் வகையில்,  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 



அதில்,"பச்சை இலை பாட்டை நீங்கள் கொண்டாடி வருவதை அறிந்தேன். வேடிக்கையான சூழலுக்கு என்று உருவாக்கப்பட்ட வேடிக்கையான பாடல் அது. ஆனால், நிஜ வாழ்வில், போதைப்பொருள் மற்றும் உங்களை அடிமையாக்கும் பொருள்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். இது எனது வேண்டுகோள்" என குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக, யுவனின் ரசிகர்கள், அவரின் பாடல்களுக்குதான் தாங்கள் அடிமை என்றும், யுவன்தான் எங்களின் Drug Dealer எனவும் செல்லமாக அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் படிக்க | இந்த வாரம் கண்ணீர் கடல்ல மிதக்கப்போகும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ