இந்த வாரம் கண்ணீர் கடல்ல மிதக்கப்போகும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனின் இந்த வாரத்துக்கான டாஸ்க் குறித்து புரோமோ வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 18, 2022, 12:08 PM IST
  • இந்த வாரம் பிக்பாஸ் இல் என்ன ஸ்பெஷல்
  • புதிய புரோமோ இதோ
இந்த வாரம் கண்ணீர் கடல்ல மிதக்கப்போகும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் title=

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜிபி முத்து, அமுதவாணன், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டர் மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பிரபலங்களுடன் 20 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். முதல் வாரத்தை கடந்து 2வது வாரத்தை எட்டியிருக்கிறது பிக்பாஸ். கடந்த சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் ஆரம்பம் முதலே அதிரடியாக சென்று கொண்டிருக்கிறது. விதவிதமான டாஸ்குகள் கொடுத்து போட்டியாளர்களை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ்.

டாஸ்குகள் மட்டும் இதுவரை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்றும் விதமாக நாமினேஷனையும் தொடங்கி வைத்திருக்கிறார். ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில்  இருப்பவர்களை கடந்து, போட்டியாளர்களால் இரண்டு பேர் நாமினேஷன் செய்ய பிக்பாஸ் அறிவுறுத்தினார். அதன்படி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களை நாமினேஷன் செய்துள்ளனர். பெரும்பாலானோர் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரை எலிமினேஷன் செய்யலாம் என கூறியிருக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவர் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார் ஜிபி முத்து. 

மேலும் படிக்க | கேமரா இருக்குனுலாம் பார்க்க மாட்டேன்... பிக்பாஸை மிரட்டியை ஜிபி முத்து!

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்க் குறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. கதை சொல்லும் நேரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கதை சொல்ல வேண்டும். மேலும் இந்த கதை சொல்லும் டாஸ்க்கை முழுவதுமாக சொல்லி முடிப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலில் கதை சொல்ல அசீம் வருகிறார். தனது சொந்த வாழ்க்கை பற்றியும், தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தது பற்றியும் அவர் முதலில் பேசத் தொடங்கினார். அப்போது சில ஹவுஸ்மேட்ஸ் தங்களுக்கு கதை பிடிக்கவில்லை என பஸ்ஸரை அமுக்கி அவரை எலிமினேஷனில் இருந்து தப்ப விடாமல் செய்கின்றனர். பின்னர் இதை நினைத்து கண்ணீர் விட்டு அசீம் அழும் காட்சிகளும் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

எனவே இந்த வாரம் முழுக்க இந்த டாஸ்க் நடைபெற இருப்பதால், வீடே கண்ணீர் அலையில் முழகி, வேறு என்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க | பிக்பாஸ் செல்லும் முன் மைனா நந்தினி பேசிய வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News