தமிழகத்திற்கு ஒரே நாளில் அகதிகளாக வந்த 18 பேர்
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து 3 படகுகளில் கைக்குழந்தையுடன் 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் இரண்டு குழுக்களாக இந்தியாவுக்கு தஞ்சமாக வந்துள்ளனர். இரண்டு படகுகளில் 3 குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனுஷ்கோடி கடல் பகுதியிலும் மற்றும் ஒரு படகில் 5 பேர் தனியாக ஒரு குழுவாக ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடல் படகுயில் வந்து இறங்கியிருக்கிறார்கள். இவர்களை கடலோர காவல் குழுமம் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | இலங்கையில் வலுக்கும் போராட்டம்: பிரதான சாலைகள், ரயில் தடங்களில் மக்கள் கூட்டம்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்கள் வாழ்வதற்கு வழி இன்றி வேலைவாய்ப்பை இழந்து ஒரு வேளை உணவிற்கே திண்டாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கையில் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வீதியில் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு, ரம்புக்கனா என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது இலங்கை போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், உணவுப்பஞ்சம் ஒரு பக்கம் உயிர் மீது அச்சம் என ஒவ்வொரு நாளும் பசியும் பட்டினியுமாக வாழ வழியின்றி, இந்தியாவுக்கு சென்ற உயிர் பயமின்றி பாதுகாப்பாக வாழலாம் என்ற நம்பிக்கையில், இலங்கையிலிருந்து அகதிகளாக ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்கு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், முதன் முதலாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதியிலிருந்து இலங்கையில் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்திற்கு ஈழத்தமிழர்கள் வரத் தொடங்கினர். இதில் ஏற்கனவே 11 குடும்பத்தை சேர்ந்த 42 ஈழத் தமிழர்கள் அகதிகளாக இலங்கையில் வாழ வழியின்றி தமிழகத்து வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் 3 படகுகளில் கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 13 நபர்கள் ஒரு குழுவாகவும், மற்றுமொரு படகில் 5 பேர் ஒரு குழுவாகவும், இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 18 பேர் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் கடல் கடந்து வந்து தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் குழுமம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் முழு விசாரணைக்கு பின்னர் அகதிகளாக வந்தவர்களை மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்ஷ பரிந்துரை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR