ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தங்க சில்லறை விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை வழங்குகின்றனர். கோடைகாலத்தில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன், விற்பனையை அதிகரிக்க, வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் விற்பனை சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முறை நேரடியான தள்ளுபடிகளுக்குப் பதிலாக, தங்கம் அல்லது வைர நகைகளை வாங்குவது ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், இலவச தங்க நாணயங்களை வழங்கும் சலுகையை அளித்துள்ளனர்.


தங்கம் கடந்த வெள்ளியன்று ஒரு அவுன்ஸ் 1,820 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இன்று, அமெரிக்கா மற்றும் பிற தங்கம் ஏற்றுமதியை தடை செய்வதைப் பற்றிய செய்தி காரணமாக, தங்கம் விலை $1,838 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


"எந்த நேரத்திலும் ஏதேனும் ஒரு பொருளின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் அதன் விலையை அதிகரிக்கும். ரஷ்யா-உக்ரைனின் தாக்கத்தின் காரணாக தங்க விலை உயர்ந்துள்ளது" என்று ஒரு பண்டக ஆய்வாளர் ஒருவர் கூறினார். 


ஞாயிற்றுக்கிழமை துபாயில் 22K தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 207.75 திர்ஹம் என்ற அளவில் இருந்தது, ஆனால் திங்கட்கிழமைக்கான முதல் விலை நிர்ணயம் செய்யப்படும் போது அது அதிகரிக்கும். உண்மையில், 207.75 திர்ஹம் என்பது கடந்த 10 நாட்களில் இல்லாத அளவாகும்.


மேலும் படிக்க | UAE: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு; உம் அல் குவைனில் புதிய வேக கண்காணிப்பு ரேடார்கள்


பிப்ரவரி பிற்பகுதியில் இருந்து, உக்ரைன் மோதல் தொடங்கியபோது, ​​தங்கம் ஒரு அவுன்ஸ் $2,000 வரை சென்றது, பின்னர் $1,800 அல்லது $1,900 என்ற அளவில் நிலைத்தது. பின் வரும் மாதங்களில் தங்கம் சுமார் $1,800 வரை குறையும் என்று தோன்றியது - ஆனால் விலை குறையவே இல்லை. இந்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயர்த்திய பிறகும், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது


"கடந்த நான்கு மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் குறைவாகவே காணப்பட்டது, மேலும் சுற்றுலாப் பயணிகளும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டவில்லை" என்று ஒரு நகை விற்பனையாளர் கூறினார். கடைசியாக இந்த ஆண்டு ஜனவரி பிற்பகுதியில் தங்கம் $1,800க்கு கீழே குறைந்தது.


மேலும் படிக்க | வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மங்கிபாக்ஸ் சோதனை: அரசு அறிவிப்பு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR