Good News For NRIs: பிரிட்டனில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களுக்கு நல்ல செய்தி கொடுக்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தயாராகிவருகிறார். இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்களை இங்கிலாந்தில் அதிக காலம் பணிபுரிய அனுமதிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிரிட்டனில் பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, வெளிநாட்டு மாணவர்களும் நீண்ட நேரம் வேலை செய்ய அனுமதிக்கலாம் மற்றும் பெரும்பாலும் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க நீண்ட நேரம் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதில், பெரும்பாலும் பகுதி நேர வேலைகளுக்கும் விரைவில் அனுமதிக்கப்படலாம் என்பது வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.


தற்போது இங்கிலாந்தில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 6 லட்சத்து 80 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் காலத்தில் வாரத்திற்கு அதிகபட்சமாக 20 மணிநேரம் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.


பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை 


தற்போதைய 20 மணி நேர வரம்பை 30 மணிநேரமாக அதிகரிக்கவோ அல்லது நேர கட்டுப்பாட்டை முற்றாக நீக்குவது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆலோசித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு பிரிட்டனுக்கு வந்த 1.1 மில்லியன் புலம்பெயர்ந்தவர்களில், 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 1,61,000 இந்திய மாணவர்கள் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தகக்து.  


மேலும் படிக்க | BBC Documentary Controversy: குஜராத் கலவர வழக்கு தொடர்பான பிபிசி ஆவணப்பட எதிரொலி


வெளிநாட்டு மாணவர்கள் படிப்பிற்குப் பிறகு இங்கிலாந்தில் தங்கலாம்


பிரிட்டனில் உள்ள வணிகத் நிறுவனங்களில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், வெளிநாட்டு மாணவர்களுக்கான வேலை நேர வரம்பை நீக்குவது தொடர் யோசனைகளின் ஒரு பகுதியாகும் என்று அரசாங்க வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தன. இந்த யோசனை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் தெரிவித்தாலும் இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுப்பது, பிரிட்டனின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


நாட்டிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்ற ஆலோசனையும் இருந்தாலும், அது மாணவர்களின் வேலை நேர வரம்பில் பாதிப்பை ஏற்படுத்தாது. வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்புக்குப் பிறகு இங்கிலாந்தில் தங்கலாம் என்றும் விதிகள் தளர்த்தப்படும்.


வெளிநாட்டு மாணவர்களைச் சார்ந்த கல்வி முறை


வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிக்கின்றனர். பட்டதாரி பணி விசா மீதான கட்டுப்பாடுகள் இந்திய மாணவர்களை ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு இடம்பெயரச் செய்யும் என்றும், இது இறுதியில் இங்கிலாந்தில் மாணவர் சந்தையின் முடிவுக்கு வழிவகுக்கும் என்பதால், பிரிட்டன் மாணவர்கள் விஷயத்தில் இணக்கமாக நடந்துக் கொள்ளும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | பிரதமர் மோடி தொடர்பான இங்கிலாந்து எம்.பியின் கேள்வி! வாயை அடைத்த ரிஷி சுனக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ