ஐக்கிய ராஜஜியத்தில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பெரும்பாலான விசாக்கள் இந்தியர்களுக்கு தான் வழங்கப்பட்டது என்பதும், அதில் மாணவர்களுக்கு விசாக்களின் எண்ணிக்கை இதுவரை ஒருபோதும்  இல்லாத அளவில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், தற்போது இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு நன்மை பயக்கும் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், புதிய இந்தியா-இங்கிலாந்து இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் முறையான பயன்பாட்டு தொடக்கத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தி வருகிறது..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-இங்கிலாந்து இளம் வல்லுநர்கள் திட்டம் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றும் இரு நாட்டிலும் இரண்டு ஆண்டுகள் வரை வாழ, படிக்க, பயணம் மற்றும் வேலை செய்ய ஆர்வமாக உள்ள இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.  உள்ளது.


கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ரிஷி சுனக் ஆகியோரால் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டமானது, பரஸ்பர அமைப்பு, இரு நாட்டு இளைஞர்களுக்கும் "கலாச்சார அனுபவங்களிலிருந்து பயனடைவதற்கும் இரு பொருளாதாரங்களிலும் நிபுணத்துவத்தைப் புகுத்துவதற்கும்" ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.


மேலும் படிக்க | NRI: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?


கடந்த ஆண்டு இங்கிலாந்து வழங்கிய 2,836,490 விசாக்களில் 25% இந்தியர்களுக்காக வழங்கப்பட்டதாகவும், புதுடெல்லி அதிக மாணவர்கள் விசாக்களைப் பெற்றுள்ளதாகவும் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்தார்.


2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து மாணவர் விசாக்கள் 73% அதிகரிப்பையும், வேலை விசாக்கள் 130% உயர்வையும் கண்டதாக எல்லிஸ் கூறினார். "கடந்த ஆண்டு பிரிட்டன் 2,836,490 விசாக்களை வழங்கியது; அதில், 25% மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கு அதிகமாக கொடுக்கப்பட்டது. 2021 இல் மாணவர் விசாக்கள் 73% அதிக அளவில் கொடுக்கபட்டுள்ளன. வேலை விசாக்கள் 130% அதிகரித்தன" என்று பிரிட்டிஷ் ஹை கமிஷனர் ட்வீட் செய்துள்ளார்.




குடியேற்றத்தை பிரிட்டன் கட்டுப்படுத்துவதாக அறிக்கைகள் வந்தாலும், இங்கிலாந்து அரசாங்கம் அதிகளவிலான புலம்பெயர்ந்தோரை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.


மேலும் படிக்க | NRI மாணவர்களுக்கு சூப்பர் செய்தி: நீங்களும் CUET UG 2023-க்கு விண்ணப்பிக்கலாம்


இந்தியா-பிரிட்டன் இளம் வல்லுநர்கள் திட்டம் இப்போது 18 மற்றும் 30 வயதிற்குட்பட்ட பட்டதாரிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றும் இரு நாட்டிலும் இரண்டு ஆண்டுகள் வரை வாழ, படிக்க, பயணம் மற்றும் வேலை செய்ய ஆர்வமாக உள்ளவர்களுக்கான திட்டம் ஆகும்.  


"இந்தியாவின் 18-30 வயதிற்குட்பட்ட பிரகாசமான இளைஞர்களுக்கு இங்கிலாந்தின் சிறந்த அனுபவத்தை அனுபவிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு" என்று புது தில்லியில் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷன் தெரிவித்துள்ளது.


இந்தப் புதிய திட்டத்திற்கான தகுதிகள் தொடர்பான குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்கள், திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் ( இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேல்) மற்றும் 2,530 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 2.6 லட்சம்) (தோராயமாக ரூ. 2.6 லட்சம்) அவர்களது சேமிப்புக் கணக்கில் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சார்ந்த மைனர் குழந்தைகளும் இருக்கக்கூடாது என்பவை முக்கியமான நிபந்தனைகள் ஆகும்.


மேலும் படிக்க | UPI- PayNow: வெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்பலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ