தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக இலங்கை பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.  நாடாளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரத்தினை கொண்டு வருவதற்கான 19 ஆவது திருத்த சட்டத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய அரசியல் திருத்தம் ஒன்றை விரைவில் அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.  மேலும், அதிபரின் ஒத்துழைப்புடன் முழுமையான அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்‌ஷ பரிந்துரை
 
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் முக்கிய உரையாற்றினார். அந்த உரையில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதை ஒப்புக்கொள்வதாக தெரிவித்த அவர், அரசாங்கம் வேண்டுமென்றே தமது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என்றும் கூறினார்.  தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.



மேலும் பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என எதிர்க்கட்சிகளை ஓர் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் மனதார அழைப்பு விடுத்ததாகவும் அந்த அழைப்பு இன்றும் செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இதேநேரம், தற்போது காலி முகத்திடலில் உள்ள போராட்டக் குழுக்களை தன்னுடன் கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு முன்னர் அழைத்திருந்ததோடு, அவர்களின் பெறுமதியான யோசனைகளை எடுத்துச் செல்ல முன்வந்தததை நினைவிற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  நீண்டகால மின்வெட்டுக்கான காரணங்களில் ஒன்று, சரியான நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமல் இருந்தமையே என தெரிவித்த பிரதமர், தற்போது அந்தக் குற்றத்தை கடந்த காலத்திற்குக் கடத்துவது பயனற்றது என்றும் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; முழு விபரம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR