SBI: என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! சூப்பர் வட்டி விகிதம் & கால்குலேட்டர்
SBI FD Interest Rates 2022: மூத்த குடிமக்களுக்கான SBI நிலையான வைப்பு வட்டி விகிதம் 2022-23: 1 வருடத்திற்கான வட்டி வருமான கால்குலேட்டர் இது
SBI FD Interest Rates 2022: நீண்டகால வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கிறது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளனர். இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும், மூத்த குடிமக்கள், மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதங்களைத் மாற்றி அமைத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு 6.9% வரை உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் எஸ்பிஐ, ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்தையும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள்/மூத்த குடிமக்களுக்கு 1 ஆண்டு மற்றும் 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம்
மூத்த குடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் எஃப்டி தொகைக்கு 6.1% வருமானத்தை வழங்கும் எஸ்பிஐ வங்கி, முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு ஒரு வருட வைப்புத்தொகைக்கு 6.6% வட்டியை வழங்குகிறது. ஐந்தாண்டு வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் பொது மக்களுக்கு 6.1% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.9% ஆகும்.
நிலையான வைப்பு வட்டி விகிதம் எஸ்பிஐ என்ஆர்ஐ
2 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு 6.1% வருவாயை வழங்குகிறது எஸ்பிஐ வங்கி. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், 2 கோடி ரூபாய் வரையிலான தொகைகளுக்கு 6.1% மற்றும் 2 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள தொகைக்கு 5% என்ற விகிதத்தில் எஸ்பிஐ வட்டிகளை திருத்தி அமைத்துள்ளது.
மேலும் படிக்க | NRI வீட்டில் வாடகைக்கு உள்ளீர்களா? இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்
நிலையான வைப்பு வட்டி விகிதம் SBI கால்குலேட்டர்
இந்தியாவில் வசிக்கும் மூத்த குடிமகனாக இருந்து, எஸ்பிஐ ஃபிக்சட் டெபாசிட்டில் ரூ.5 லட்சத்தை ஓராண்டுக்கு முதலீடு செய்ய விரும்பினால், ஆண்டு வட்டியாக 33,826 வட்டி கிடைக்கும். முதிர்வுத் தொகை 6.6% என்ற வட்டி விகிதத்தில் 5,33,826 ரூபாயாக இருக்கும். இந்தத் தொகையை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ.5,35,403 ஆக இருக்கும்.
என்ஆர்ஐ டெபாசிட்டுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதம் எஸ்பிஐ கால்குலேட்டர்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யும் டெபாசிட்களுக்கு எஸ்பிஐ 6.1% வட்டியைக் கொடுக்கிறது. எனவே, ஒரு என்ஆர்ஐ ஒரு வருடம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால், வட்டியாக ரூ.6,10,000 என்ற அளவில் வட்டி மட்டும் கிடைக்கும். வட்டியையும் சேர்த்து அவர் பெறும் முதிர்வுத் தொகை 1,06,10,000 இந்திய ரூபாயாக இருக்கும்.
மேலும் படிக்க | அமீரகத்தில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ