ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி... விசா பெறுவதில் தாமதம்... தவிப்பில் இந்திய மாணவர்கள்!
ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான சரிவு காரணமாக, வெளிநாட்டில் படிப்பதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கலவி கற்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு கடும் சரிவால் வெளிநாட்டிற்கு சென்று படிப்பதற்கு அதிக செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது மாணவர்களுக்கு சிறிது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சென்று படிப்பதற்கான செலவு ஆண்டுக்கு 1.5 முதல் 2 லட்சம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கல்விக் கட்டணத்தில் 10-20 சதவீதம் அதிகரித்துள்ளது வெளிநாட்டில் படிப்பதற்கான செலவு அதிகப்பதற்கான மற்றொரு காரணியாகும். மேலும், சமீபகாலமாக அதிகரித்துள்ள விமானக் கட்டணங்கள் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு சுமையை அதிகரித்துள்ளன. மேலும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதும், அவர்களின் பிரச்சினைகளை அதிகரிக்கிறது. மாணவர் விசாக்களுக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விசாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர்களும் ரூபாயின் வீழ்ச்சியால் அதிக செலவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடு மற்றும் தங்கும் விடுதிகளுக்கான வாடகை கட்டண உயர்வு காரணமாக, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, வீடு கிடைப்பதில் சிக்கல்களை சந்தித்து வருகின்றன.
மற்ற நாடுகளின் மாணவர் விசா வழங்குவதில் தாமதம் காரணமாக இந்திய மாணவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையி, ஜெர்மனி செல்லும் மாணவர்கள் சில நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவையின் சமீபத்திய ஆராய்ச்சி, 2017 ஆம் ஆண்டு 17,570 என்ற அளவிற்கு இருந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 34,134 ஆக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும் படிக்க | NRI News: கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி!
ஜெர்மன் அரசாங்கம் கல்விக்கு நிதியளிக்கிறது. ஜெர்மனியில் அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் எந்த வெளிநாட்டு மாணவர்களுக்கும் கல்விக்கான செலவுகள் இல்லை. மற்ற நன்கு அறியப்பட்ட நாடுகளில், அதிக பணம் செலுத்தி கல்வியை பெற நிலை இருக்கையில், ஜெர்மனியில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் மிக சலுகையாக இது உள்ளது. இந்திய மாணவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாகும். இந்திய மாணவர்கள் ஜெர்மனி போன்ற இடங்களில் மிக குறைந்த செலவில் பல்வேறு படிப்புகளை படிக்கலாம்.
ரூபாய் மதிப்பு சரிவினால் அமெரிக்காவில் படிப்பதற்கான சராசரி செலவு ஆண்டுக்கு ரூ. 1.5 முதல் 2 லட்சம் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச கல்விக்கான சமூக அடிப்படையிலான தளமான யோக்கெட்டின் இணை நிறுவனர் சுமீத் ஜெயின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் தேர்வாக இருந்த நிலையில், இப்போது, தற்போதைய விசா தாமதங்களால் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை மாணவர்களுக்கான புதிய தேர்வுகளாக உருவெடுத்துள்ளன.
வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருப்பது கோவிட்-19 தொற்றுநோய். அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் விசா பெற மாணவர்கள் ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் சேரும் இந்திய மாணவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்க விசாவைப் பெற முடியும்.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 10 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பார்கள் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகம். தற்போது விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால், விசா அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிக பட்சமாக விசா பெற 440 நாட்கள் ஆகும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ