ரஷ்ய பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த புழவஞ்சி கிராம வாலிபர்!
ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி- மயூரா இவர்களின் மகள் அல்பினா என்பவரை காதலித்து வந்தார். இது பற்றி மணமகள் வீட்டாரிடமும் தனது தாய் தந்தையரிடமும் கூறி அல்பினாவை திருமணம் செய்து கொள்ள சம்மதத்தைப் பெற்றார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மணியன்- கிருஷ்ணம்மாள் தம்பதியரின் மகன் பிரபாகரன். இவர் யோகா ஆசிரியராக கடந்த பத்து வருடங்களாக ரஷ்யாவில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி- மயூரா இவர்களின் மகள் அல்பினா என்பவரை காதலித்து வந்தார். இது பற்றி மணமகள் வீட்டாரிடமும் தனது தாய் தந்தையரிடமும் கூறி அல்பினாவை திருமணம் செய்து கொள்ள சம்மதத்தைப் பெற்றார்.
மணமகன் -மணமகள் இருமணமும் ஒன்றுபட மணமகள், மணமகன் பெற்றோர்களும் ஒப்புதல் தெரிவிக்க இன்று பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூரில் இவர்கள் இருவருக்கும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமக்களை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தினர். அப்போது பிரபாகரன் கூறுகையில் நான் யோகா டீச்சர் ஆக ரஷ்யாவில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய யோகா மாணவியாக அல்பினால் இருந்த நிலையில் எங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
மேலும் படிக்க | NRI American Mayor: கலிஃபோர்னியாவில் மேயரான வெளிநாடு வாழ் இந்தியர் மைக்கி ஹோதி
இதனை அடுத்து எங்களது பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று இன்று அவர்கள் முன்னிலையே எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது என்றார். அல்பினால் கூறும் போது ரஷ்யா கலாச்சாரத்தை விட தமிழ் கலாச்சாரமும், இங்குள்ள மக்கள் மற்றும் இவர்களது வாழ்க்கை முறை, இயற்கை சார்ந்த அமைப்புகளும் எனக்கு ரொம்பவே பிடித்துள்ளது. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன் கூடிய விரைவில் இங்குள்ள மக்களிடம் சகஜமாக தமிழ் பேசி நானும் ஒரு தமிழ் பெண்ணாக ஆகிவிடுவேன் என்றார்.
மேலும் படிக்க | 10 நாடுகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு UPI சேவை!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ