NRI American Mayor: கலிஃபோர்னியாவில் மேயரான வெளிநாடு வாழ் இந்தியர் மைக்கி ஹோதி

Mikey Hothi Mayor of the City of Lodi: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லோடி நகரின் மேயராக மைக்கி ஹோதி என்ற வெளிநாடுவாழ் இந்தியர் தேர்வாகியுள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 26, 2022, 10:48 AM IST
  • கலிஃபோர்னியாவில் சாதனை படைத்த என்.ஆர்.ஐ
  • லோடி நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மைக்கி ஹோதி
  • வரலாற்று சாதனை படைத்த என்.ஆர்.ஐ மைக்கி ஹோதி
NRI American Mayor: கலிஃபோர்னியாவில் மேயரான வெளிநாடு வாழ் இந்தியர் மைக்கி ஹோதி title=

கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லோடி நகரின் மேயராக தேர்வாகி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் ஒரு வெளிநாடுவாழ் இந்தியர். அவர் சீக்கியர் மைக்கி ஹோதி. மைக்கி ஹோதியின் பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லோடி நகரத்தின் மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார், லோடி நகரத்தின் வரலாற்றில் முதல் இடத்தைப் பிடித்த முதல் சீக்கியர் ஆவார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் லிசா கிரெய்க் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மைக்கி ஹோதி, நவம்பரில் மேயர் மார்க் சாண்ட்லர் தேர்தலில் வெற்றி பெற்று துணை மேயரானார். அமிக்கி ஹோதி, கவுன்சிலின் ஐந்தாவது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

கடந்த ஆண்டு மேயர் சாண்ட்லரின் கீழ் துணை மேயராக பணியாற்றிய அவர், இனிமேல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒருமனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.

மேலும் படிக்க | கொரோனாவுக்கு நடுவே சீனாவில் உதட்டு முத்த ட்ரெண்டிங்..! இதெல்லாம் தேவையா பாஸ்?

"லோடி நகரின் 117வது மேயராக பதவியேற்றதில் பெருமை அடைகிறேன்" என்று ஹோதி வெள்ளிக்கிழமை ட்வீட் செய்தார்.

ஆம்ஸ்ட்ராங் சாலையில் சீக்கியர் கோவிலை நிறுவுவதில் அவரது குடும்பத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர் என்று கலிபோர்னியா மாகாணத்தின் உள்ளூர் செய்தித்தாள் தி லோடி நியூஸ்-சென்டினல் தெரிவித்துள்ளது.

"சீக்கியராக, அமெரிக்காவில் நாங்கள் பெற்ற அனுபவம் எங்களுக்கு முன் வந்த ஹிஸ்பானிக் சமூகம், கிரேக்க சமூகம், ஜெர்மனியர்கள் அனுபவித்தது போன்றது" என்று ஹோதி கூறியதாக அந்தப் பத்திரிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

"எங்கள் மூதாதையர் லோடி நகரத்திற்கு வந்தனர், ஏனென்றால் அது ஒரு பாதுகாப்பான நகரம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இந்த ஊரில் சிறந்த கல்வி, சிறந்த மனிதர்கள், சிறந்த கலாச்சாரம், சிறந்த மதிப்புகள் மற்றும் கடினமாக உழைக்கும் மக்களைக் கொண்டுள்ளது. லோடி நகரின் மேயராக பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன், ”என்று ஹைத்தி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | கொரோனாவுக்கு நடுவே சீனாவில் உதட்டு முத்த ட்ரெண்டிங்..! இதெல்லாம் தேவையா பாஸ்?

2008 இல் டோகே உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றவர் ஹோதி. 9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் நியாயமற்ற துன்புறுத்தலை அனுபவித்ததாக அவர் ஒரு முறை தெரிவித்திருந்தார். ஆனால், தங்கள் குடும்பம் லோடியில் நிம்மதியாக வாழ முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹைத்தி ஹோதியின் பெற்றோர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். லோடி நகரமே, தங்களை நிம்மதியாகவும், வளமாகவும் செழித்து வாழ வைத்ததாகவும் ஹைத்தி தெரிவித்தார். லோடி நகரில் வெற்றிகரமான நிறுவனங்களை நிர்வகிக்கும் வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர்.  

மேலும் படிக்க | கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை சிதைத்த பனிப்புயல்! அமெரிக்காவில் 17 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News