அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சென்னை மணமகனை கைபிடித்த போலந்து மணமகள்!

இந்திய குடும்ப உறவு முறைகளையும் கலாச்சாரத்தையும் வெளிநாட்டு பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை சமீபத்திய திருமண சம்பவம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 9, 2022, 11:45 AM IST
  • போலந்தை சேர்ந்த மணப்பெண் மார்த்தா அன்ன ரோசல்ஸ்கா.
  • வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாசாரத்தில் வளர்ந்து இருந்தாலும், தமிழ் கலாசாரத்தை அதிகம் விரும்பும் வெளிநாட்டு மணமகள்.
  • இரு வீட்டார் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு.
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சென்னை மணமகனை கைபிடித்த போலந்து மணமகள்! title=

சென்னை அயனாவரத்தை சேர்ந்த வித்யநாத் - ஜோதிலஷ்மி தம்பதியின் மகன் மோத்திகிருஷ்ணன் போலாண்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். போலந்து நாட்டை சேர்ந்த அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்த மார்த்தா அன்ன ரோசல்ஸ்காவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கொரோனா காரணமாக சென்னைக்கு வர முடியாத சூழல் இருந்த நிலையில் தற்போது சென்னைக்கு வந்து மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. 

மேலும் படிக்க | நியூசிலாந்து காதலியை கரம் பிடித்த சென்னை மணமகன்

போலந்தை சேர்ந்த மணப்பெண் மார்த்தா அன்ன ரோசல்ஸ்காவும் வெளிநாட்டில் பிறந்து அங்குள்ள கலாசாரத்தில் வளர்ந்து இருந்தாலும், தமிழ் கலாசாரத்தை அதிகம் விரும்பியதாவும், மார்த்தா அன்ன ரோசல்ஸ்காவின் ஆசைப்படியே சென்னையில் தமிழ் கலாச்சாரத்தின் படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து தாலி கட்டி, உறவினர்களின் ஆசிர்வாதத்துடன் அண்ணா நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில வெகு விமர்சையாக இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மணமகள் வீட்டை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாழையடி வாழையாக மணமக்கள் வாழ வேண்டும் என விரும்பி தமிழர் கலாசாரத்தில் திருமணம் செய்து வைத்ததாக மோத்திகிருஷ்ணன் தாய் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ஸ்டார் வார்ஸ் படையுடன் தெறிக்கவிட்ட மணமகன்: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

மேலும் படிக்க | ஐரோப்பா பெண்ணுக்கும் திருமங்கல இளைஞருக்கும் டும்டும்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News