ராமேஸ்வரம்: இலங்கை பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இத்த்துடன் சேர்த்து, அண்டை நாட்டில் இருந்து தமிழகம் வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துவிட்டது. தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கினார்கள். இலங்கை தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் கடலோர காவற்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வழியாக தமழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.


மேலும் படிக்க | Emergency Aid: இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் அவசரகால கடனுதவி தரும் ஆஸ்திரேலியா


இந்நிலையில் இலங்கை மன்னார்; மாவட்டம் பேச்சாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன், கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட 6 பேர் இலங்கை யாழ்பாணத்தில் இருந்து பைபர் படகில் புறப்பட்டு இன்று காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல்; மணல் திட்டில் வந்திறங்கினர்.


இலங்கையில் இருந்து சிலர் மணல் திட்டுப் பகுதிக்கு வந்த தகவலறிந்த மண்டபம் கடலோர காவல் படையினர், முதல் மணல் தீட்டில் வந்து இறங்கிய இலங்கைத் தமிழர்களை, ஃஹேவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் போலீசாரம் ஒப்படைத்தனர்.


விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது.


மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு! கோவிட் முடிந்துவிட்டதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ