அயோத்தியில் ராமரின் பிறப்பிடமான ஸ்ரீராம ஜென்மபூமியை பார்வையிட வந்த அமெரிக்க என்ஆர்ஐ-யின் பாஸ்போர்ட் மற்றும் 600 டாலர் பணம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அந்த பெண், தனது பாஸ்போர்ட் மற்றும் டாலர்களை தனியார் லாக்கரில் வைத்திருந்தார். லாக்கர் நடத்துபவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அந்தப் பெண் வழக்குப் பதிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கு ராம்கோட் காவல் நிலைய எல்லைக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய ராமஜன்மபூமி காவல்நிலைய எஸ்எச்ஓ ஓம்பிரகாஷ் திவாரி, ‘திங்கள்கிழமை அமெரிக்கப் பெண் தாரா கோன்சாய் தனது லக்னோ உறவினருடன் அயோத்திக்குச் செல்ல வந்திருந்தார். அவர் தனது பையை ராம்கோட் அமாவான் கோவில் அருகே லாக்கர் ஆபரேட்டர் தீப்நாராயணனிடம் டெபாசிட் செய்துவிட்டு ராமஜென்மபூமிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்ததும் லாக்கரில் இருந்த பையை எடுத்துக்கொண்டு கனக் பவனுக்கு சென்று வணங்கினார். அங்கு தனது பையை திறந்து பார்த்தபோது அதில் பாஸ்போர்ட் மற்றும் 600 டாலர்கள் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது’ என்றார். 


அந்த பெண்ணின் பையில் அவரது தங்க செயின் மற்றும் மொபைல் இருந்ததாகவும், அவரது பாஸ்போர்ட் மற்றும் டாலர்களை மட்டுமே காணவில்லை என்றும்  எஸ்.எச்.ஓ. தெரிவித்தார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில், லாகர் நிர்வாகி தீப்நாராயண், அவரது சகோதரி பூஜா, குஞ்சன் மற்றும் தாய் இஸ்ரவதி ஆகியோர் மீது ஐபிசி 406 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, காணாமல் போன பாஸ்போர்ட், டாலர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | 22 வயதில் துபாய் பயணம்! 24 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த NRI


லட்சக்கணக்கில் வருமானம்:


அயோத்தியில் உள்ள தர்ஷன் மார்க்கில் சுமார் 30 முதல் 35 லாக்கர் ஆபரேட்டர்கள் தங்களுடைய தனிப்பட்ட லாக்கர்களை வைத்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் மதிப்புமிக்க பொருட்கள், பணப்பைகள், மொபைல்கள், நகைகள் மற்றும் பணம் போன்றவற்றை இந்த லாக்கர்களில் வைக்கிறார்கள். இந்த லாக்கர் ஆபரேட்டர்கள் பக்தர்களிடமிருந்து இந்த சேவைக்கு 20 ரூபாய் வசூலிக்கின்றனர். ஒரு லாக்கர் ஆபரேட்டரிடம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட லாக்கர் பெட்டிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசு ஏற்பாடுகள் சரியாக இல்லாததால் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது


கடைகளில் திறந்திருக்கும் இந்த லாக்கர்களில் இருந்து பொருட்கள் காணாமல் போவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. ஆனால், இதுபோன்ற வழக்குகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்வதில் இருந்து பின்வாங்குகின்றனர். அரசு ஏற்பாடுகள் முறையாக இல்லாததால், பக்தர்கள் இந்த தனியார் லாக்கர்களில் தங்கள் பொருட்களை வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.  இது குறித்து கூறிய அயோத்தியின் ரெஸிடெண்ட் மாஜிஸ்திரேட் சந்தீப், ‘விரைவில் அரசு அல்லது அறக்கட்டளைகள் மூலம் இதற்கான முறையான ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார். 


மேலும் படிக்க | துபாய்வாசிகளுக்கு நல்ல செய்தி: இனி எளிதாக காவல்துறை உதவியை பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ