புதுடெல்லி: இந்தியாவில் இருந்து உறைந்த கடல் உணவுகள் மீதான தடையை கத்தார் நீக்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஃபீபா கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து உறைந்த கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு கத்தார் தடை விதித்திருந்தது. இந்த தடை நீக்கமானது, ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்று இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிஃபா உலகக் கோப்பை


கடந்த ஆண்டு நவம்பரில், ஃபிஃபா உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில சரக்குகளில் விப்ரியோ காலரா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தடையை கத்தார் விதித்தது.


இறக்குமதிக்கு தற்காலிக தடை விதித்த கத்தார்


இந்த தடை தற்காலிகமானது என்றும், கால்பந்து நிகழ்விற்கு முன்னதாக, தங்கள் நாட்டில் போதிய சோதனை ஆய்வகங்கள் இல்லாத காரணத்தாலும், இந்த இறக்குமதித் தடை விதிக்கப்படுவதாக கத்தார் அதிகாரிகள் இந்தியாவுக்குத் தெரிவித்திருந்தனர். கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் வணிகத் துறையும் இணைந்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டன.


மேலும் படிக்க | Golden Visa: முதலீட்டை ஈர்த்த கோல்டன் விசாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐரோப்பிய நாடு!


கத்தாரின் பொது சுகாதார அமைச்சகத்துடன் கலந்துரையாடல்களில், உறைய வைக்கப்பட்ட கடல் உணவுகளுக்கான தடையை நீக்குவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 16 அன்று வெளியாகின. இருப்பினும், குளிரூட்டப்பட்ட கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.


"இந்த வாரம் இந்தியாவில் உள்ள கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் நல்ல காலம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,நிலைமையை மறுபரிசீலனை செய்த பிறகு, குளிர்ந்த கடல் உணவுகள் மீதான கத்தாரின் கட்டுப்பாடுகளும் விரைவில் அகற்றப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (எம்பிஇடிஏ) தலைவர் டி வி சுவாமி தெரிவித்தார்.


மேலும் படிக்க | Neal Mohan: சுந்தர்பிச்சையை தொடரும் நீல் மோகன்! யூடியூப் புதிய CEO


இந்தியப் பொருட்களுக்கு சீனாவின் தடை


சில நாட்களுக்கு முன்னதாக, சீனாவும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தடையை நீக்கியது. பெய்ஜிங் பிப்ரவரி 14 அன்று, மூலக் கட்டுப்பாடு குறித்த இந்தியாவின் உத்தரவாதத்தை ஒப்புக்கொண்ட பிறகு, 99 இந்திய கடல் உணவு பதப்படுத்தும் ஏற்றுமதியாளர்களின் இடைநீக்கத்தை நீக்கியது.


பெய்ஜிங் நிறுத்திவைத்த பொருட்கள்


2020 டிசம்பரில் இருந்து மொத்தம் 110 ஏற்றுமதி பொருட்களை பெய்ஜிங் நிறுத்திவைத்ததை திரும்பப் பெறுவதில் MPEDA மற்றும் பிற ஏஜென்சிகள் முக்கிய பங்கு வகித்தன.


மேலும் படிக்க | துருக்கி நிலநடுக்கத்தில் 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ