இந்திய மாணவர்கள் கனடாவில் மலிவான தொழிலாளர்களாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துளன. தேவைப்படாவிட்டால் அவர்களை நிராகரிப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டுவதாக புளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (2022, நவம்பர் 1) வெளியான அந்த அறிக்கையில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அதிக வேலையின்மை விகிதம், இந்த செப்டம்பரில் 5.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், கனடாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் ஒரு புதிய தற்காலிக நடவடிக்கையை அறிவித்தார் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனடாவில் உள்ள 5,00,000 க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களுக்கு அதிக மணிநேரம் வேலை செய்வதற்கும், பட்டப்படிப்பு முடிந்த பிறகு 18 மாதங்கள் வேலை தேடுவதற்கும் அனுமதி நீட்டிப்பு நடவடிக்கையை, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியது.


இருப்பினும், இந்த நிரந்தர-குடியிருப்பு மாணவர்களில் சிலருக்கு வேலை செய்யவோ அல்லது நாட்டில் இருக்கவோ அனுமதி கொடுக்கப்படவில்லை.  


மேலும் படிக்க | ஹாங்காங்கின் புதிய விசா திட்டம்: இந்தியர்களுக்கு அதிக பலன் கிடைக்கும்


'வெளிநாட்டு மாணவர்களைமலிவு தொழிலாளர்களாக மட்டும் பயன்படுத்தாதீர்கள்'
"நான் வேலையில்லாமல் இருக்கிறேன், எனது சேமிப்பிலிருந்து வாழ்கிறேன்... கனடா வெளிநாட்டு மாணவர்களை மலிவு உழைப்பாளியாக மட்டும் பயன்படுத்தாமல் அவர்களை மதிக்க வேண்டும்," என்று செனிகா கல்லூரியின் கணக்காளரும் முன்னாள் மாணவருமான டேனியல் டிசோசா டொராண்டோ, ப்ளூம்பெர்க்கிடம் கூறினார்.


1.83 லட்சம் இந்திய மாணவர்கள் கனடாவில்  கல்வி பயின்று வருகின்றனர். வெளிநாடுகளில் கல்வி பயிலும் இந்தியர்களின் எண்ணிக்கை பட்டியலில் கனடட இரண்டாம் இடத்தில் உள்ளது.  


ஜனவரி முதல், 4.52 லட்சத்திற்கும் அதிகமான படிப்பு அனுமதி விண்ணப்பங்களுக்கு கனடா அனுமதி கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் செயலாக்கப்பட்ட 3.67 லட்சத்துடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகமாகும் என்று குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் கூறினார்.


2021 இல், கனடாவில் 6.20 லட்சத்திற்கும் அதிகமானோர் இருந்தனர், அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.


2021 திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த பல பட்டதாரிகள், அவர்களது பணி அனுமதி காலாவதியானபோது, ​​அவர்கள் நிரந்தரமாக குடியிருக்க அனுமதி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.


மேலும் படிக்க | NRI: உகாண்டாவில் பயங்கரம்: இந்திய இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் 


இந்திய மாணவர்கள் வேலை, வருமானம் அல்லது பலன்கள் இல்லாத அவலநிலையை எதிர்கொள்கின்றனர்: ப்ளூம்பெர்க்
விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மாணவர்கள் அங்கு சென்றாலும், வேலை, வருமானம் அல்லது உடல்நலம் மற்றும் சமூக நலன்கள் ஏதுமின்றி பல மாதங்கள் வரை கஷ்டப்படுகின்றனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.


"அவர்களுக்கு தேவைப்படும்போது, ​​எங்களைச் சுரண்டினார்கள். ஆனால் எங்களுக்கு அவர்களின் உதவி அல்லது ஆதரவு தேவைப்படும்போது, ​​யாரும் அதை செய்ய முன்வருவதில்லை" என்று டொராண்டோவில் உள்ள எர்ன்ஸ்ட் & யங்கின் முன்னாள் ஆலோசகர் அன்ஷ்தீப் பிந்த்ரா ப்ளூம்பெர்க்கிடம் கூறினார்.


அரசாங்கத் தரவுகளின்படி, கனேடியப் பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்கள் ஆண்டுதோறும் C$21 பில்லியனுக்கும் ($15.3 பில்லியன்) அதிகமாகப் பங்களிக்கின்றனர்.


தரமான கல்வி, விசா மற்றும் குடிவரவு விதிகள் மற்றும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகள் காரணமாக வெளிநாடு செல்லும் மாணவர்கள் மத்தியில் கனடா பிரபலமான தேர்வாக உள்ளது.


மேலும் படிக்க | 'எங்கள் நிலத்தை போலீஸ் அதிகாரியே அபகரித்துள்ளார்’: குற்றம் சாட்டும் NRI தம்பதி


கனடாவில் தங்க ஆர்வம் காட்டும் இந்திய மாணவர்கள்
பெரும்பாலான இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்க ஆர்வமாக உள்ளனர். கனடாவின் புள்ளிவிபரங்களின்படி, நிரந்தர வதிவிடத்தைப் பெறும் சர்வதேச மாணவர்கள், அங்கு வாழ்ந்த அனுபவத்தின் காரணமாக கனேடிய தொழிலாளர் சந்தையில் நல்ல பங்களிக்கின்றனர்.


2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கல்விக்காக வெளிநாடு செல்லும் 64,667 இந்தியர்கள் அமெரிக்காவை தங்கள் இலக்காகக் குறிப்பிட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து கனடா (60,258) என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.


தொற்றுநோய்க்கு முன்பு, 2019 இல், 1,32,620 இந்திய மாணவர்கள் கனடாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், கொரோனா தாக்குதலுக்குப் பிறகு, இந்த எண்ணிக்கை 43,624 ஆக குறைந்தது, 2021 இல் 1,02,688 ஆக கடுமையாக உயர்ந்தது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.


மேலும் படிக்க | அமீரக மக்களுக்கு முக்கிய செய்தி: இன்று முதல் பெட்ரோல் விலையில் மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ