கொழும்பு: இலங்கையில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக, நாட்டின் தெற்கில் உள்ள இலங்கையின் பெரும்பான்மை சிங்கள சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள், மூன்று தசாப்த காலத்தின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள், கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசாங்கப் படையினருக்கு இரங்கல் தெரிவித்தனர். பெருமளவிலான சேதத்தை ஏற்படுத்திய இந்த உள்நாட்டுப் போர் 13 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தனித் தமிழர் தாயகத்தை அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் நடைபெற்ற மூன்று தசாப்த போர் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முடிவடைந்தது. எல்டிடிஇ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு வெள்ளமுளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டதை அடுத்து இந்த போர் முடிவுக்கு வந்தது. 


ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று, இலங்கை ஆயுதப் படைகள் போர் வெற்றியைக் கொண்டாடும் அதே வேளையில், இறுதிக்கட்ட மோதலின் போது இறந்த தமிழர்களுக்காக தமிழர்கள் துக்கம் அனுசரிக்கிறார்கள்.


இந்த நிலையில், இந்த ஆண்டு, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி 40ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவரும் அரசு எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அவரது அலுவலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்கள், தமிழ் கிளர்ச்சியாளர்கள், அரசுப் படையினர் என அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.


மேலும் படிக்க | WISE: இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பணம் அனுப்பும் மலிவான வழிமுறை 


"மே 18 அன்று போரில் இறந்த, கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன அனைவரையும் நினைவு கூர்வதற்கும் துக்கம் செலுத்துவதற்கும் நாங்கள் கூடியுள்ளோம்" என்று போராட்டக்காரர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


“மே 18 இறுதிக் காலப் போரின் போது முல்லைவாய்க்காலில் ஒரு மெல்லிய இடைவெளி கொண்ட நிலத்தில் அகப்பட்டு சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளான ஆயிரக்கணக்கான தமிழீழ முதியோர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை நினைவு கூர்வதற்கான நாளாகும்” என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 


2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதாக தமிழர்கள் குற்றம் சுமத்தினாலும், இலங்கை இராணுவம் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது.


ஐநா அறிக்கையின்படி, உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் குறைந்தது 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.


பௌத்த, இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள் இந்த நினைவஞ்சலியில் கலந்துகொண்டனர்.


தலைநகரில் உயிரிழந்த தமிழர்களை பகிரங்கமாக நினைவு கூரும் முதல் நிகழ்வு இது என்று வடக்கின் தமிழ் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாதன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு போலிசார் அங்கு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கவில்லை என மட்டக்களப்பு கிழக்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


வடக்கில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களை அமைக்க இராணுவம் அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR