தமிழகத்திற்கு தப்ப முயன்ற 14 தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், அங்கிருந்து பலர் தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாட்டுக்கு, தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.


இதற்கான மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி உட்பட பல பொருட்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.



மேலும் படிக்க | இலங்கைக்கு உதவ கட்சி அலுவலகத்திற்கு நிவாரணப் பொருட்களை அனுப்புங்கள்


இந்நிலையில், இலங்கையின் மன்னார் பேசாலை  கடற்பரப்பின் வழியாக தமிழகம் வர முயற்சி செய்த  14 தமிழர்களை இலங்கை  கடற்படையினர் கைது செய்தனர்.


உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றுத் தவிக்கும் தமிழர்கள், தமிழகத்திற்கு அகதியாக வருவது அதிகரித்துள்ளது. நேற்று இலங்கை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தமிழர்கள் படகு மூலம்  தமிழகம் வர முயன்றபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர், 14  பேர் வந்த படகை பறிமுதல் செய்து படகில் இருந்தவர்களை கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட 14 பேரையும் கடற்படையினர், முகாமில் தங்க வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்ததும் அனைவரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்க படுவார்கள் என தெரியவந்துள்ளது.


இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வரும் மக்களை தடுத்து நிறுத்தும் பணியை இலங்கை கடற்படையினரும், போலீசாரும் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ளனர்.


இதன் ஒரு பகுதியாகவே இந்த 14 பேர் கைதும் பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR